Christmas: White house-இல் டொனால்ட் டிரம்பின் கடைசி கொண்டாட்டம்

கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டு அலங்காரங்களையும் மெலனியா டிரம்ப் கண்காணித்தார். இருப்பினும், இந்த ஆண்டு மெலனியாவும், டிரம்பும் சமூக ஊடகங்களில் ட்ரோலிங் செய்யப்படுகின்றனர்.  

நன்றி தெரிவிக்கும் சம்பிரதாயத்துடன்  (Thanksgiving ceremony) வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை காலங்கள் தொடங்கப்பட்டன. டொனால்ட் டிரம்ப், தனது மனைவி மெலனியா டிரம்ப்புடன் இணைந்து வெள்ளை மாளிகையில் தனது அதிபராக தனது கடைசி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தனர்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் குடும்பத்தின் கடைசி கிறிஸ்துமஸ் இதுவே ஆகும்.  அமெரிக்காவின் புதிய அதிபராக  ஜோ பிடன் (Joe Biden) ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்ட பிறகு, அவர் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தால், டிரம்ப் White House-இல் இருந்து வெளியேற வேண்டும்.

Read Also | #DiaperDon: டிவிட்டரில் டிரெண்டாகும் டிரம்பின் tiny desk 

(Photograph:The New York Times)

1 /6

புதிய தொடக்கத்திற்கு நன்றி 2020, நவம்பர் 24 ஆம் தேதியன்று   வாஷிங்டனில் (Washington) உள்ள வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் (Rose Garden) நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சம்பிரதாய நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் கலந்துக் கொண்டார். அவருடன் அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் (Melania Trump) நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.    (Erin Schaff © 2020 The New York Times) (Photograph:The New York Times)

2 /6

வெள்ளை மாளிகையில் டிரம்ப் குடும்பத்தின் கடைசி கிறிஸ்துமஸ் இதுவே ஆகும்.  அமெரிக்காவின் புதிய அதிபராக  ஜோ பிடன் (Joe Biden) ஜனவரி மாதம் பதவியேற்றுக் கொண்ட பிறகு, அவர் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தால், டிரம்ப் White House-இல் இருந்து வெளியேற வேண்டும்.   (Doug Mills © 2020 The New York Times) (Photograph:The New York Times)

3 /6

மகிழ்ச்சியின் குறியீடாக  கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப், 2020 நவம்பர் 23ஆம் தேதி, திங்கட்கிழமையன்று வெள்ளை மாளிகையில் ’வெள்ளை மாளிகை கிறிஸ்துமஸ் மரத்தை’ (White House Christmas tree) பெறுகிறார்.   கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டு அலங்காரங்களையும்  மெலனியா டிரம்ப் கண்காணித்தார். இருப்பினும், இந்த ஆண்டு மெலனியாவும், டிரம்பும் சமூக ஊடகங்களில் ட்ரோலிங் செய்யப்படுகின்றனர்.   (Photograph:The New York Times)

4 /6

'அமெரிக்கன் தி பியூட்டிஃபுல்' ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் செய்யப்படும்போது, அவை ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக கொண்டு செய்யப்படும். இந்த ஆண்டு அலங்காரத்தின் கருப்பொருள்  “அமெரிக்கன் தி பியூட்டிஃபுல்”  (Doug Mills © 2020 The New York Times) (Photograph:The New York Times)

5 /6

மகிழ்ச்சியின் குறியீடாக  கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது (Photograph:The New York Times)

6 /6

'வொயிட் ஹவுஸ் எக்ஸ்பிரஸ் 2020 (White House Express 2020) 'வொயிட் ஹவுஸ் எக்ஸ்பிரஸ் 2020' ((White House Express 2020) என்ற ரயில் இந்த ஆண்டு மேஜை அலங்காரங்களின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.  (Photograph:The New York Times)