பிட்காயின் தயாரிக்க எரிமலை மூலம் மின்சாரம்! புதிய யுக்தியை பயன்படுத்தும் நாடு!

எல் சால்வடோர் நாட்டின் புதிய அறிவிப்பால் உயர்ந்த பிட்காயின் விலை சில மணிநேரத்திற்குப் பின்பு சரியத் தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2021, 05:19 PM IST
பிட்காயின் தயாரிக்க எரிமலை மூலம் மின்சாரம்! புதிய யுக்தியை பயன்படுத்தும் நாடு! title=

எல் சால்வடோர் :  உலகிலேயே முதல் நாடாக மத்திய அமெரிக்கப் பகுதியில் இருக்கும் ஒரு குட்டி நாடான எல் சால்வடோர் அரசு பல அரசு அமைப்புகளின் தடை, எச்சரிக்கையைத் தாண்டி உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினை அமெரிக்க டாலரைப் போல் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு வெளியான போது கிரிப்டோ சந்தையில் கலவையான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிலையில் தற்போது மீண்டும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு கிரிப்டோ சந்தைக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

எல் சால்வடோர் நாட்டின் இப்புதிய அறிவிப்பால் உயர்ந்த பிட்காயின் விலை சில மணிநேரத்திற்குப் பின்பு சரியத் தொடங்கியுள்ளது.  எல் சால்வடோர் நாட்டில் பிட்காயின் அதிகாரப்பூர்வ நாணயமாக மாறியுள்ள நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி எல் சால்வடோர் பிட்காயின் உற்பத்தியில் இறங்க முடிவு செய்துள்ளது. எல் சால்வடோர் நாட்டின் அதிபரான Nayib Bukele பிட்காயின் உற்பத்தியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையைத் தீர்க்கவும் முடிவு செய்துள்ளார்.

bitcoin

பிட்காயின் உற்பத்தியில் நிலக்கரி போன்ற பாசில் எரிபொருள் அதிகமாகப் பயன்படுத்தும் காரணத்தால் மின்சாரத் தட்டுப்பாடு மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் சூற்றுசூழ்நிலையைப் பாதிக்கப்படுவதாக எலான் மஸ்க் உட்படப் பல முன்னணி டெக் வல்லுனர்கள் மற்றும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர்.  இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் Nayib Bukele பிட்காயின் உற்பத்திக்கு எரிமலை மூலம் மின்சாரம் தயாரித்து அதன் மூலம் பிட்காயின் கிரிப்டோகரன்சியை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளார். தற்போது உற்பத்தியில் இறங்கியுள்ள நிலையில் எல் சால்வடோர் நாட்டின் அதிபர் நயீப் முக்கியமான தகவலையும் வெளியிட்டுள்ளார்.

எரிமலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நாங்கள் தற்போது டெஸ்டிங் செய்து வருகிறோம். முதல் கட்ட உற்பத்திக்காகப் பிட்காயின் உற்பத்தி தளத்தையும் அமைத்து வருகிறோம். மேலும் தற்போது வரையில் இத்தளத்தின் மூலம் 0.0059 பிட்காயின் உற்பத்தி செய்துள்ளோம். இதன் மதிப்பு 260 டாலர் என்றும் நயீப் கூறியுள்ளார்.  சமீபத்தில் தான் சீன பிட்காயின் வர்த்தகம் முதல் உற்பத்தி வரையில் மொத்தமாகத் தடை செய்து மொத்த கிரிப்டோ சந்தையில் இருந்து சீன விலகியிருக்கும் நிலையில், எல் சால்வடோர் போலவே இந்தோனேசியா, தாய்லாந்து, அமெரிக்கா, போன்ற பல நாடுகள் கிரிப்டோவர்த்தகத்தை எப்படி முறைப்படுத்துவது என்பதை ஆய்வு செய்து வருகிறது.

bitcoin

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 0.46 சதவீதம் வரையில் சரிந்து 47,698.70 டாலர் வரையில் சரிந்துள்ளது. எல் சால்வடோர் அறிவிப்பு கிரிப்டோ சந்தையைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  மேலும் எதிரியம் 3.348.55 டாலருக்கும், ரிப்பிள் 1.03 டாலருக்கு, கார்டானோ 2.18 டாலருக்கும், போல்காடாட் 30.88 டாலருக்கும், ஸ்டெல்லார் 0.3026 டாலருக்கும், டோஜ்காயின் 0.214 டாலருக்கும், செயின்லிங்க் 26.43 டாலருக்கும், யூனிஸ்வாப் 25.13 டாலருக்கும், லைட்காயின் 166.26 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

ALSO READ மர்மங்கள் நிறைந்த Bermuda Triangle! மிரட்டும் மாய பிண்ணனி என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News