Samsung அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் மானிட்டர்.... ஒரே நேரத்தில் பல வேலை செய்யலாம்..!!!

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) இன்று தனது புதிய ஸ்மார்ட் மானிட்டரை (Smart Monitor) உலக சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் மானிட்டரில், நீங்கள் ஒரே திரையில் பல வேலைகளை செய்ய முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2020, 04:53 PM IST
  • உலக சந்தைகளில் சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் கிடைக்கிறது.
  • கனெக்டிவிட்டி மற்றும் ப்ளெக்ஸிபிளீடியில் ஒப்பிடமுடியாத திறன் கொண்டது.
  • மொபைல் போன் மற்றும் லாப் டாப் உடன் இணைக்க முடியும்
Samsung அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் மானிட்டர்.... ஒரே நேரத்தில் பல வேலை செய்யலாம்..!!! title=

புதுடில்லி: சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) இன்று தனது புதிய ஸ்மார்ட் மானிட்டரை (Smart Monitor) உலக சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் மானிட்டரில், நீங்கள் ஒரே திரையில் பல வேலைகளை செய்ய முடியும். இந்த ஸ்மார்ட் மானிட்டர் வொர்க் ப்ரம் ஹோம், ஹோம் லேர்னிங் மற்றும் பொழுதுபோக்கு (Work, Learning and Entertainment)  ஆகியவற்றை ஒரே இடத்தில் கிடைக்க செய்கிறது.

ஸ்மார்ட் மானிட்டர் (Smart Monitor)  புதிய அனுபவத்தை கொடுக்கும். சாம்சங்கின் ஸ்மார்ட் மானிட்டர் மொபைல் போன் கனெக்டிவிடி மற்றும் பிசி, லாப்டாப் கனெக்டிவிடி அடிப்படையில் சிறந்த கேஜெட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சாம்சங்கின் பில்ட்-இன் ஸ்மார்ட் டிவி (Smart TV) ப்ளாட்ஃபார்மை போன்றது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics)  விஷுவல் டிஸ்ப்ளே பிஸினஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஹைசுங் ஹா கூறுகையில், சாம்சங் இந்த சாதனத்தை உலகம் தற்போதுள்ள நிலையில் வீட்டிலிருந்து வேலை (Work from Home), படிப்பு, பொழுதுபோக்கு போன்ற தேவைகளை கருத்தில் கொண்டுஉருவாக்கியுள்ளது என்றார். இந்த ஸ்மார்ட் மானிட்டர் நுகர்வோரின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்யப் போகிறது என்றார்.

ALSO READ | மக்களே உஷார்... இந்த 7 ஆப்களை உங்கள் போனிலிருந்து உடனே டெலிட் பண்ணுங்க!

சிறந்த கனெக்டிவிட்டிஅம்சம்
சாம்சங்கின் ஸ்மார்ட் மானிட்டர் (Samsung Smart Monitor)  பிசி, லாப்டாப் மற்றும் ஸ்மார்ட்போனை இணைப்பதற்கான சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. ஸ்மார்ட் மானிட்டரிலிருந்து மொபைல் (Mobile), ஆப் காஸ்டிங் அல்லது ஆப்பிள் ஏர்ப்ளேவை இணைக்க, ஒரு  கிளிக் தான் தேவைப்படும். இது மட்டுமல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் டெக்ஸுடன்  (Samsung DeX)  இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மானிட்டர் வைஃபை உடன் இணைக்கப்பட்டுள்ளது
மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 போன்ற செயலிகளை சாம்சங்கின் ஸ்மார்ட் மானிட்டரிலும் பயன்படுத்தலாம், ஏனெனில் இது வைஃபை (WiFi) சபோர்டையும் கொண்டுள்ளது. வைஃபை பயன்படுத்தி, க்ளைடில் உங்கள் பைலைக் காணலாம், திருத்தலாம் மற்றும் சேமிக்கலாம்.

HBO, Netflix, YouTube ஆகியவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் இது சிறந்த அனுபவத்தை கொடுக்கும். சாம்சங் ஸ்மார்ட் மானிட்டரை பொழுதுபோக்கு மையமாகவும் பயன்படுத்தலாம். இதில், HBO, Netflix, YouTube போன்ற OTT அடிப்படையிலான செயலிகள் மூலம் நீங்கள் பொழுதுபோக்கிற்காக இதனை சிறப்பாக அனுபவிக்க முடியும்.

ALSO READ | இந்தியாவிற்கு வரும் PUBG-யின் புதிய அவதாரங்கள்.. புதிய கட்டுபாடுகள்..!!!

Trending News