இந்தியாவிற்கு வரும் PUBG-யின் புதிய அவதாரங்கள்.. புதிய கட்டுபாடுகள்..!!!

புதிய அவதாரத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது PUBG.  இதற்கான புதிய நேரக் கட்டுப்பாடுகள், புதிய தோற்ற, தரவு பாதுகாப்பு பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

Last Updated : Nov 13, 2020, 03:21 PM IST
  • புதிய அவதாரத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது PUBG.
  • இதற்கான புதிய நேரக் கட்டுப்பாடுகள், புதிய தோற்ற, தரவு பாதுகாப்பு பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
  • விளையாட்டில், உள்ளூர் தேவைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளடக்கம் மேம்படுத்தப்பட்டு வடிவமைக்கப்படும் என்று நிறுவனம் கூறியது.
இந்தியாவிற்கு வரும் PUBG-யின் புதிய அவதாரங்கள்.. புதிய கட்டுபாடுகள்..!!! title=

புதிய அவதாரத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது PUBG.  இதற்கான புதிய நேரக் கட்டுப்பாடுகள், புதிய தோற்ற, தரவு பாதுகாப்பு பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த புதிய விளையாட்டு செயலி, குறிப்பாக இந்திய சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது.

தீபாவளி சமயத்தில்,  நாட்டில் விளையாட்டாள பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்கான ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், PUBG மொபைல் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த PUBG கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இந்தியாவில் அதன் சீன வெளியீட்டு கூட்டாளியான டென்செண்டுடன் உறவுகளை முறித்துக் கொள்ள நிறுவனம் முடிவு செய்த பின்னர் பப்ஜி விளையாட்டின் மறு வெளியீட்டுக்கான ஊகங்கள் மேலும் பரவின.

இந்த புதிய விளையாட்டு குறிப்பாக இந்திய சந்தைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது. இது இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விளையாட்டு என்பதால், விளையாட்டில் இரண்டிலும் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயனர்களின் தரவு பாதுகாப்பு:

இந்தியாவில் (India) PUBG மொபைலை தடை செய்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த பப்ஜி செயலியை பயன்படுத்தும் பயனர் தரவுகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் தான் கரணம். PUBG மொபைலின் புதிய பதிப்பில், PUBG கார்ப்பரேஷன், பயனர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் என்று நிறுவனம் கூறியது. பாதுகாப்பை வலுப்படுத்தவும், அவர்களின் தரவு பாதுகாப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்யவும்  நிறுவனம் உறுதியான நடவடிக்கைகளையும் தணிக்கைகளையும் மேற்கொள்ளும் என உறுதி கூறபட்டுள்ளது.

ALSO READ | சீனாவை கை கழுவும் PUBG நிறுவனம்... இந்தியாவிற்கு திரும்புவது எப்போது..!!!

செயலியின் உள்ளடக்கத்தில் மேம்பாடு

விளையாட்டில், உள்ளூர் தேவைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளடக்கம் மேம்படுத்தப்பட்டு வடிவமைக்கப்படும் என்று நிறுவனம் கூறியது. 

தோற்றத்தில் மாற்றம்

முன்னதாக, பயனர்களுக்கு ஹிட் வண்ணங்களை மாற்றுவதற்கான தேர்வு இருந்தது. புதிய பதிப்பில், பச்சை நிறம் ஹிட் வண்ணமாக டீபால்டாக அமைக்கப்படும். விளையாட்டின் மெய்நிகர் தன்மையை பிரதிபலிக்கும் பொருட்டு இந்த மாற்றம் செய்யப்படும்.

புதிய நேர கட்டுப்பாடுகள்

விளையாட்டு நேரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று PUBG கார்ப்பரேஷன் தெளிவுபடுத்தியுள்ளது. விளையாட்டை விளையாடுபவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான விளையாட்டுப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக நிறுவனம் இன்னும் கடுமையான நேர கட்டுபாடுகளை கடைபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள்:

உள்ளூர் வீடியோ கேம், இ-ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் ஐடி தொழில்களை மேம்படுத்துவதற்காகக இந்தியாவில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 750 கோடி) முதலீடு செய்ய நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய நிறுவனம் வணிகம், இணைய விளையாட்டு மற்றும் விளையாட்டு மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும், மேலும் உள்ளூரில் அலுவலகத்தை நிறுவுவதோடு கூடுதலாக அதன் கேமிங் சேவையை வலுப்படுத்த உள்ளூர் வணிகங்களுடன் உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.  

ALSO READ | Google Drive-ல் உள்ள புகைப்படங்கள் காணாமல் போகலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News