பத்மாவத் வழக்கு: தள்ளுபடி செய்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு!!

பத்மாவத் விவகாரத்தில் பன்சாலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை ராஜஸ்தான் ஐகோர்ட்டு தற்போது தள்ளுபடி செய்ததுள்ளது.

Last Updated : Feb 6, 2018, 06:25 PM IST
பத்மாவத் வழக்கு: தள்ளுபடி செய்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு!! title=

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான படம் `பத்மாவத்'. இந்த திரைப்படம் பல எதிர்ப்புகளை தாண்டி கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் இப்படத்தில் நடித்த தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரின் மீது வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து அவர்களுக்கு எதிராக தீவானா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

அதில், பத்மாவத் திரைப்படம் வரலாற்றை சிதைத்துவிட்டது என்றும் ராணி பத்மினி பற்றிய மக்கள்வைத்திருக்கும் உயர்ந்த எண்ணத்தை காயப்படுத்திவிட்டது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து வழக்கை விசாரித்து வந்த ஐகோர்ட்டு தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோருக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது.

‘VIACOM18 மோஷன் பிக்சர்ஸ் – பன்சாலி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. பலர் இப்படத்திற்கு நல்ல கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Trending News