ஐதராபாத்:-
இதேபோல தெலுங்கானா ஐதராபாத் சிட்டியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டிடம் இடிந்து இருவர் பலி பலியாகினர். ராமந்த்பூர் உப்பால் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். ஹைதராபாத்தில் ஒரே நாளில் மழைக்கு 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி:-
டில்லி மற்றும் அதனை சுற்றிய புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெளிச்சம் குறைவாகவே உள்ளதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய செய்து செல்கின்றன.
விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகள் சாலைகளில் பொறுமையாகவும், சாலை விதிகளை மதித்தும் செல்ல வேண்டும் என போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். டில்லியின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கி உள்ள படங்கள் சமூக வளைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டில்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து மேலும் சிக்கலாகி உள்ளது.