ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Last Updated : Mar 21, 2017, 10:41 AM IST
ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! title=

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சரக்கு-சேவை வரி மசோதா-2017 (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி), ஜிஎஸ்டி-யால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 16-ம் தேதி டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.  இந்த மசோதாக்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. ஜிஎஸ்டி தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது

நாடு முழுவதிலும் ஒரே சீரான வரி விதிப்பு முறை என்பது இதன் முக்கிய அம்சமாகும். ஜிஎஸ்டியில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்கப்படும். சொகுசு கார், குளிர்பானங்கள், புகையிலைப் பொருள்களுக்கு அதிகபட்ச வரியுடன் கூடுதல் வரியும் உண்டு. 

Trending News