Korean Weight Loss Drinks : இந்தியர்கள் பலர், அமெரிக்கர்களை முன்னோடிகளாக பார்க்க ஆரம்பித்த காலம் மாறி, இப்போது கொரியர்களின் கலாச்சாரங்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். கொரிய படங்கள், தொடர்கள் முதல், பாடல்களில் இருந்து, அழகு குறிப்புகள் வரை இந்தியர்களின் தினசரி செல்ஃப் கேரில் கொரியர்களின் தாக்கம் இருக்கிறது. கொரியர்களை உற்று நோக்கினால் தெரியும். நடிகர்கள் மட்டுமன்றி, அதில் சாதாரணமாக உலாவும் ஆட்கள் கூட ஒல்லியாகவும், பளபளப்பாகவும் இருப்பர். இவர்கள், இப்படி உடலை குறைக்கவும், ஃபிட் ஆக வைத்திருக்கவும், பளபளப்பாக இருக்கவும் அவர்கள் சில மேஜிக் பானங்களை குடிக்கின்றனர். அவை என்னென்ன தெரியுமா?
பார்லீ டீ:
இதனை, கொரிய மொழியில் பொரிச்சா என குறிப்பிடுவர். பார்லீயை நன்றாக வருத்து அதனை தேனீராக செய்து சாப்பிடலாம். வருத்த பார்லீயை 10-15 நிமிடங்கள் கொதிக்க வைத்து அதில் புதினா இலைகளை தூவி சாப்பிடலாம். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடலில் வெயிட் ஏறாது. மேலும், உடலில் நீர்ச்சத்து குறைவதையும் இது தவிர்க்கிறது.
கிரீன் டீ:
இது, இந்தியாவில் பொதுவாக வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என நினைக்கும் பலரால் குடிக்கப்படும் பானமாகும். இதனை கொரிய மொழியில் நோக்ஷா என்கின்றனர். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிகம் இருப்பதால் பலர் இதனை குடிக்கின்றனர். இதை குடிப்பதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, கொழுப்பையும் எரிக்கிறது. மேலும், உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் சக்தியும் இந்த பானத்திற்கு உண்டு. கிரீன் டீ பேக்கை வெந்நீரில் டிப் செய்து, 2 அல்லது 3 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். அல்லது மூலிகை இலைகளை வைத்து செய்தும் டீ தூளாக மாற்றி உபயோகிக்கலாம்.
இலவங்கப்பட்டை மற்றும் தேன்:
இலவங்கப்பட்டை மற்றும் தேனை வைத்து இந்த பானத்தை செய்ய வேண்டும். இதற்கென்று பெரிதாக மெனக்கெட தேவையில்லை. சுடு தண்ணீரில் இலவங்கப்பட்டையை போட்டு, தேன் கலந்து குடித்தால் மட்டும் போதும். இதனை வெறும் வயிற்றில் குடித்தால் இன்னும் ரொம்ப நல்லது. இனிப்பு சாப்பிட வேண்டும் என தோன்றும் போது, இதனை சாப்பிடலாம். இது, உங்களது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதுடன் கொழுப்பையும் குறைக்கலாம்.
சோயா பால்:
இதனை கொரிய மொழியில் தாயு என்கின்றனர். சோயா பாலில் அதிக புரத சத்துகள் இருப்பதாக கொரியாவில் மட்டுமல்ல, உலகளவில் நம்பப்படுகிறது. இது, கொஞ்சம் குடித்தாலும் நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், இதில் கொழுப்பும் குறைவாக உள்ளது. அது மட்டுமன்றி தசை வளர்ச்சிக்கும் இந்த சோயா பால் உதவுகிறது.
கிரேப்ஃப்ரூட் டீ:
நீங்கள் கொஞ்சம் புளிப்பு மற்றும் இனிப்பு பிடித்த ஆளாக இருந்தால் உங்களுக்கு சரியான பானமாக இருக்கிறது, கிரேப்ஃப்ரூட் டீ. இதில் வைட்டமின் சி இருப்பதால், இது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அது மட்டுமன்றி மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கிறது. இதனை செய்ய கிரேப்ஃப்ரூட்டை வெட்டி, அதனுடன் தேன் சேர்த்து வெந்நீரில் போட்டு குடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத கொரியர்கள்! பின்பற்றும் டயட் இதுதான்!!
மேலும் படிக்க | பெண்களை ஈசியாக ஈர்க்க கொரிய ஆண்கள் செய்யும் விஷயம்! கத்துக்கோங் பாய்ஸ்..
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ