காவிரி: கன்னடர்களின் வெறியாட்டம் 50 பஸ்களுக்கு தீ வைப்பு

Last Updated : Sep 12, 2016, 08:06 PM IST
காவிரி: கன்னடர்களின் வெறியாட்டம் 50 பஸ்களுக்கு தீ வைப்பு title=

தமிழகத்திற்கு கர்நாடகா காவிரி நீர் திறந்துவிட்டதை கண்டித்து பெங்ளூரூவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடைகள் அடைக்கப்பட்டன, தமிழகத்தை சேர்ந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. 

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானதாலும் பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்பட மாநிலம் முழுவதும் காலையில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் காவிரி போராட்டம் தீவிரமாகியது. போராட்டம் வன்முறையாக வெடித்து உள்ளது.

பெங்களூரு நகரில் தமிழக பதிவு எண்களை கொண்ட லாரிகள், பிற வாகனங்கள் மீது கன்னட அமைப்பினர் கண்மூடித்தனமாக கற்களை வீசி தாக்கினார்கள். மேலும் தமிழக லாரிகளை தீவைத்து கொளுத்தினார்கள். ஆவலஹள்ளி அருகே நியூ திம்மய்யா லே-அவுட்டில் சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த தமிழக பதிவு எண்களை கொண்ட 27 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தமிழகத்தை சேர்ந்த 44 லாரிகள் மற்றும் 2 காருக்கு தீ வைக்கப்பட்டது.

தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் உள்ள பள்ளிக்கூடங்கள், கடைகள், ஓட்டல்களும், கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளார்கள். அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை, தமிழ்ச்சங்க அலுவலகத்திற்கும் முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  கர்நாடக மற்றும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

மேலும் பெங்களூருவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் நகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் 

இந்நிலையில் பெங்களூருவில் தமிழகத்தை சேர்ந்த 50 மேற்பட்ட தனியார் பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார். பெங்களூருவில் தனியார் பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது. இதானல் அங்கு கடும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. 

 

 

 

Trending News