அனைத்து சாதனைகளையும் முறியடித்து டெல்லியின் காற்று....!!

உலகின் மிகவும் மோசமான காற்று மாசுபட்ட நகர பட்டியலில் இடம் பிடித்த டெல்லி மாநகரம். டெல்லி மீதான சர்வதேச பார்வை மாறத் தொடங்கியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 15, 2019, 05:52 PM IST
அனைத்து சாதனைகளையும் முறியடித்து டெல்லியின் காற்று....!! title=

புதுடெல்லி: உலக காற்று தர குறியீட்டு (World Air Quality Index) தரவுகளின்படி, உலகின் காற்று மிகவும் மாசுபட்ட நகரம் என்ற பட்டயலில் டெல்லி (Delhi)  நகரம் இணைத்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை டெல்லியில் காற்றின் மாசு AIQ 527 அளவை அடைந்துள்ளது. காற்றின் மாசு அளவு குறித்த புள்ளி விவரங்கள் தொடர்ந்து அப்பேட் செய்யப்பட்டு வருகின்றன. அதில் பார்த்தல் இரவை விட பகலில் தான் AQI அளவு அதிகமாக இருக்கிறது எனக் காட்டுகின்றன.

ஏர் விஷுவல் படி, டெல்லியின் காற்றின் தரம் நவம்பர் 5 ஆம் தேதி அனைத்து அளவுகளையும் முறியடித்தது, அதன்பிறகு தொடர்ந்து ஒன்பது நாட்களாக மோசமாக நிலையில் காற்றின் தரம் உள்ளது. காற்றின் உள்ள மாசு குறித்த பதிவுகள் தொடங்கியதிலிருந்து, இதுதான் மிக நீண்ட காற்று மாசுபட்ட காலம் ஆகும்.

இந்திய துணைக் கண்டத்தின் மாசுபட்ட முதல் 10 நகரங்களில் டெல்லி, லாகூர், கராச்சி, கொல்கத்தா, மும்பை மற்றும் காத்மாண்டு போன்றவை இடம் பெற்றுள்ளன. அதாவது, ஆசியாவில் காற்று மாசுபாடு தெற்காசியாவில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த பட்டியலில் மூன்று இந்திய நகரங்கள் உள்ளன. இதைவைத்து பார்த்தால், அதாவது கொல்கத்தாவுடன் ஒப்பிடும்போது காற்று மாசுபாடு பிரச்சினை வட இந்தியாவில் மட்டுமல்ல என்பது தெளிவாகிறது. டெல்லியின் காற்று மாசு இரட்டிப்பாகும்.

 

சர்வதேச மட்டத்தில், டெல்லியின் காற்று மாசுபாடு தலைப்புச் செய்திகளில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது, இப்போது இந்தியா உலகளவில் ஒரு சூப்பர் சக்தியாக மாற முயற்சித்து வரும் நிலையில், தேசிய தலைநகரில் உள்ள மாசு நிலைமை உலகளாவிய சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் மற்றும் இந்தியா மீதான சர்வதேச கருத்தை சீர்குழைத்து உள்ளது என்பதில் மாற்றுக் கருது இல்லை. 

ஒருபக்கம் அரசு தொடர்ந்து பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் காற்றின் மாசு மிகவும் மோசமாகி வருகிறது. இது பெரும் கவலை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் இன்று டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் டெல்லி அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் டில்லி அரசிடம் பல கேள்விகளை எழுப்பினார்கள். மேலும் ஒற்றை-இரட்டை இலக்க வாகன இயக்க திட்டத்தால் காற்று மாசுபாட்டில் இருந்து ஏதாவது நிவாரணம் கிடைத்துள்ளதா? எனக் கேட்டத்தோடி, அதுக்குறித்து தகவலையும் அளிக்கமாறு கூறினார். மேலும் டில்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை சரி செய்ய காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, பல வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து உள்ளது. 

மேலும் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், டில்லியில் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் காற்றின் தரம் உயரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு ஒற்றை-இரட்டை இலக்க வாகனம் இயக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக, அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 18 அன்று முடிவு எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News