Onam Festival: ஓணம் பண்டிகையொட்டி கேரள மக்களுக்கு ரூ. 1000 பரிசுத்தொகை அறிவிப்பு

Onam Gift: ஓணம் பண்டிகையொட்டி அங்குள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ1000 பரிசுத் தொகையினை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 06:28 PM IST
  • ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதியன்று தொடங்கியது.
  • 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.1000 பரிசுத்தொகை அறிவிப்பு.
  • சாதி-மத பேதமின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம்.
Onam Festival: ஓணம் பண்டிகையொட்டி கேரள மக்களுக்கு ரூ. 1000 பரிசுத்தொகை அறிவிப்பு title=

Onam Gift: கேரள மக்கள் சாதி, மத, இனம் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து ஓணம் பண்டிகையை (Onam Festival) ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதியன்று தொடங்கியது. இது வருகிற 23 ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையொட்டி அங்குள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ1000 பரிசுத் தொகையினை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

சமூகப் பாதுகாப்பு மற்றும் நலநிதி ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு கேரள அரசு அறிவித்துள்ள இந்த ஓணம் பரிசுத்தொகை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விநியோகம் செய்யப்படுகிறது.

பி.பி.எல் மற்றும் அந்தியோதாயா அன்னயோஜனா திட்டங்களில் இருக்கக் கூடிய 14 லட்சத்து 78 ஆயிரத்து 236 குடும்பங்களுக்கு இந்த உதவித் தொகையானது சென்று சேரும். இந்த திட்டத்திற்காக கேரள அரசு ரூ.147 கோடியே 83 லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்காக பயனாளிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கூட்டுறவுப் பதிவாளர்களிடம் வழங்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ | கேரளா மக்களால் கோலாகலமாக கொண்டாடும் ஓணம் பண்டிகை...

பருவ மழைக்காலம் முடிந்து கேரளத்தில் எங்கும் பசுமை பூத்திருக்கும் காலத்தில் ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம். சாதி-மத பேதமின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான திருவோணத்தில் நிறைவுபெறும். 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News