Budget 2024 Live Updates: நிறைவடைந்தது பட்ஜெட் உரை... புதிய வரி விதிப்பில் முக்கிய மாற்றம் - அனைத்தும் இதோ!
Budget Announcement 2024 In Tamil: 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து, உரையை நிறைவு செய்தார்.
New budget 2024 in Tamil: 18ஆவது மக்களவை தேர்தலில் வென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வான நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வானார்.
இந்நிலையில், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்த பின்னர் முதல்முறையாக மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை, காகிதமில்லா பட்ஜெட்டாக தற்போது தாக்கல் செய்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இருந்த நிலையில், இப்போது கூட்டணி கட்சிகளின் உதவியோடே ஆட்சி அமைத்திருக்கிறது. அந்த வகையில், கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆளும் ஆந்திரா மாநிலத்திற்கும், ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலத்திற்கும் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டு, நிதியும் ஏராளமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஒருமணிநேரத்திற்கும் மேலாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார்.
Latest Updates
இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பாதையை உறுதி செய்யும் பட்ஜெட் - அண்ணாமலை
வளர்ச்சி சார்ந்த, நலன் சார்ந்த மற்றும் மக்களுக்கான பட்ஜெட் 2024. இது இந்தியாவின் ஒட்டுமொத்த நீண்ட கால வளர்ச்சிப் பாதையை உறுதி செய்யும் அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒன்றிய பாஜக அரசை நிராகரிப்போம் -துரைமுருகன்
பட்ஜெட் தாக்கல் செய்யும் போது தமிழ்நாடு என்கிற பெயரை ஒரு இடத்தில் கூட இடம்பெற செய்யாத ஒன்றிய பாஜக அரசை நிராகரிப்போம் -தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.
பெருத்த ஏமாற்றத்தை அளித்த மத்திய பட்ஜெட்
2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது -எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி.
Budget 2024: 'காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்த பாஜக' - ப.சிதம்பரம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், 2024-25 பட்ஜெட் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவரது X தளத்தில், "மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை படித்திருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் அறிக்கையின் பக்கம் 30இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வேலைவாய்ப்பு உடனான ஊக்கத்தொகையை (ELI) அவர் ஏறத்தாழ ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ஒரு கொடுப்பனவுடன் (Allowances) நிதியமைச்சர், பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காங்கிரஸ் அறிக்கையில் உள்ள வேறு சில திட்டங்களையும் நிதியமைச்சர் அப்பட்டமாக காப்பி அடித்திருக்கிறார் என நினைக்கிறேன். இங்கு சொல்லத் தவறியவற்றை விரைவில் பட்டியலிடுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
Budget 2024 Live Updates: ஒரு மணிநேரத்திற்கும் மேலான பட்ஜெட் உரை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலான பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் நிறைவு செய்தார்.
Budget 2024 Live Updates: புதிய வருமான வரி திட்டத்தில் மாற்றம்
வருமானம் வருமான வரி 3 லட்சம் வரை வரி இல்லை ரூ.3,00,001 - ரூ. 7 லட்சம் வரை 5% ரூ.7,00,001 - ரூ. 10 லட்சம் வரை 10% ரூ.10,00,001 - ரூ. 12 லட்சம் வரை 15% ரூ.12,00,001 - ரூ. 15 லட்சம் வரை 20% ரூ. 15 லட்சம் முதல் 30% Budget 2024 Live Updates: பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
Budget 2024 Live Updates: ஏஞ்சல் டாக்ஸ் ரத்து
முதலீட்டாளரர்களுக்கான ஏஞ்சல் டாக்ஸ் (Angel Tax) ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிகப்பட்டுள்ளது.
Budget 2024 Live Updates: இனி தங்கம் விலை குறையும்!
தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதத்திற்கு குறைப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்கம் விலை இனி வரும் காலங்களில் குறையும் என எதிர்பார்க்கலாம்.
Budget 2024 Live Updates: மொபைல் போன் இறக்குமதி வரி குறையும்
மொபைல் போன், அதன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியில் 15% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Budget 2024 Live Updates: நிதிப்பற்றாக்குறை குறையும்
நடப்பு நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Budget 2024 Live Updates: பீகார், ஆந்திராவுக்கு ஜாக்பாட்
பீகாா் மாநில நீர்பாசன, வெள்ளத்தடுப்பு திட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுகிறது என்பதால் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
Budget 2024 Live Updates: மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்
பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு பட்ஜெட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Budget 2024 Live Updates: ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Budget 2024 Live Updates: நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள்
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் (Pradhan Mantri Awas Yojana) நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும். மொத்தம் 3 கோடி இலசவ வீடுகள் கட்டித்தரப்படும்.
Budget 2024: முத்ரா கடன் திட்டம்
தருண் பிரிவில் முத்ரா கடன்களின் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Budget 2024: கரீப் கல்யாண் திட்டம் மேலும் நீட்டிப்பு
பிரதமரின் இலவச உணவுப்பொருள் வழங்கும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னா யோஜனா (Pradhan Mantiri Garib Kalyan Anna Yojana) திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Budget 2024: ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி
ஆந்திர பிரதேசம் மாநில வளர்ச்சிக்காக 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திராவின் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஆந்திரா தலைநகரை நிறுவ 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
Budget 2024: ஆந்திரா, பீகாருக்கு சிறப்பு திட்டங்கள்
பீகார், ஆந்திர பிரதேசம், ஓடிசா மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார். ஆந்திரா, பீகார் மாநிலங்களை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முறையே தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஆட்சி செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
Budget 2024: பணிபுரியும் பெண்களுக்கு ஹாஸ்டல்
தொழில்துறையுடன் இணைந்து பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைத்து தரப்படும். இதனால் பெண்களின் வேலைவாய்ப்புகள் அதிகமாகும்.
Budget 2024: புதிதாக பணிக்கு வருபவர்களுக்கு ஒரு மாத ஊதியம்
உற்பத்தித்துறையில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு ஒரு மாத ஊதியம் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இது 30 லட்சம் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Budget 2024: விவசாயிகளுக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
- கடுகு, சூர்யகாந்தி, நிலக்கடளை, எள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம்.
- வேளாண்துறைக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
Budget 2024: இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள்
இளைஞர்கள் நலனுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Budget 2024: பட்ஜெட்டில் 4 இலக்குகள்
ஏழைகள், பெண்ள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
Budget 2024: உரையாற்ற தொடங்கினார் நிர்மலா சீதாராமன்
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது பட்ஜெட் உரையை தொடங்கினார்.
அதிரடி அறிவிப்புகள்
இன்று வரவுள்ள அதிரடி அறிவிப்புகள் என்ன? முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.
சாமானியர்களுக்கு வரி விதிப்பில் சர்ப்ரைஸ் காத்திருக்கு
இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களின் பல எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். கடந்த சில வாரங்களில் அனைத்து துறைகளை சேர்ந்த சங்கங்களும், பிரதிநிதிகளும் தங்களுக்கான கோரிக்கைகள நிதி அமைச்சகத்திடம் அளித்துள்ளனர். சாமானியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்ன? முழு விவரங்களை இங்கே காணலாம்.
Budget 2024: வெள்ளை நிற கைத்தறி சேலையில் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நிர்மலா சீதாராமன் இன்று ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற ரவிக்கையுடன் கூடிய வெள்ளை நிற கைத்தறி சேலை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
நேர்த்தியான அந்த புடவை தங்க மற்றும் ஊதா நிற பார்டரால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.. நிர்மலா சீதாராமனின் சேலையின் வெள்ளை நிறம் தூய்மை, நல்லிணக்கம் மற்றும் இந்திய கலாச்சாரத்தில் புதிய தொடக்கத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. 2019இல் இருந்து பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிர்மலா சீதாராமன், அப்போது இருந்து பட்ஜெட்டிற்கு கைத்தறி சேலையை அணிந்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு காத்திருக்கும் குட்நியூஸ்
Union Budget 2024-25: இன்று தாக்கல் செய்யப்படயுள்ள பட்ஜெட்டில் PM Kisan திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
பென்ஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. பட்ஜெட்டில் குட் நியூஸ்
இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் அடல் பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான தொகையை இரட்டிப்பாக்கலாம். முழு விவரங்களை இங்கே காணலாம்.
Budget 2024: பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்
இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இன்னும் சில நிமிடங்கள் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Budget 2024 : பிரதமர் மோடி வருகை
2024-25 பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தற்போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
Budget 2024: தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
இன்றைய மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு சார்ந்த பல்வேறு நிதி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில்களின் இரண்டாம் கட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு; மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல்; நிலுவையில் உள்ள பல ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். முன்னதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் X தளத்தில் நேற்று முன்தினம் 6 திட்டங்களை குறிப்பிட்டு, அவை தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளது என்றும் இதுகுறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் பதிவிட்டிருந்தார்.
Budget 2024: 5 முக்கிய எதிர்பார்ப்புகள் என்னென்ன?
மத்திய பட்ஜெட் 2024 இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மக்கள் அனைவரும் இந்த 5 அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் இருக்குமா என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பட்ஜெட் 2024: சுகாதார துறையினரின் முக்கிய எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா....
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டான இதில், தங்களுக்கு சாதகமாக அறிவிப்பு வெளியாகும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் மட்டுமல்லாது, பொது மக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
1. ஆயுஷ்மான் பாரத் மற்றும் விரிவான காப்பீட்டுத் திட்டம் மேலும் விரிவுபாடுத்தப்படுவதோடு, சிறந்த மருத்துவ காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
2. மருத்து காப்பீட்டுத் துறையில் வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை 18%க்குக் கீழ் குறைப்பது அவசியம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
3. பிரதான் மந்திரி ஜன் ஔஷதி யோஜனா (PMJAY) போன்ற அரசாங்க திட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. எனவே, மருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் அறிவ்ப்பு வெளியிடப்படலாம் எனவும், ஜெனரிக் மருந்துகள் குறித்த விதிகள் ஏற்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவான தகவல்களளை இஞ்கே பெறலாம்
பட்ஜெட் 2024... மருந்துகள் விலை முதல் ஆயுஷ்மன் பாரத் வரை முக்கிய எதிர்பார்ப்புகள்
Budget 2024: நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்
காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பட்ஜெட் டேப்லெட் உடன் அவர் வருகை தந்தார்.
Budget 2024: ராஷ்டிரபதி பவனில் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதை முன்னிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். அப்போது நிர்மலா சீதாராமனுக்கு, திரௌபதி முர்மு இனிப்புகளை ஊட்டினார்.
மலிவு விலை வீடுகள், வீட்டுக்கடனில் நிம்மதி தரும் ட்விஸ்ட்:
இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது நடக்குமா? முழு விவரங்களை இங்கே காணலாம்.
Budget 2024: நாடாளுமன்றத்தில் ஜம்மு & காஷ்மீர் பட்ஜெட்
இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் உடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட் பிரதிகள் இன்று நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 2024-25 நிதியாண்டின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவினங்களை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.
Budget 2024: சாதனை படைக்க காத்திருக்கும் நிர்மலா சீதாராமன்
2019ஆம் ஆண்டில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் 5 முறை முழு பட்ஜெட், 1 முறை இடைக்கால பட்ஜெட் என தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இன்று தாக்கல் செய்யும்பட்சத்தில் சுதந்திரத்திற்கு பின் இந்தியா, தொடர்ச்சியாக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை பெறுவார் நிர்மலா சீதாராமன். இதற்கு முன் மொரார்ஜி தேசாய் 6 முறை பட்ஜெட்டை தொடர்ச்சியாக தாக்கல் செய்திருந்தார்.
44% சம்பள உயர்வு... அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் சில நாட்களில் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. இதில் சில செய்திகள் இன்றே கிடைக்கலாம். இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.
Budget 2024: நிதி அமைச்சகம் வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்!
டெல்லியில் உள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்தார்.
Budget 2024: நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி உயரும்...!
பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 6.5 முதல் 7 சதவீதமாக இருக்கும் என்று அதில் கணிக்கப்பட்டுள்ளது.
Budget 2024: நேரலையை எதில், எப்போது பார்ப்பது?
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதை நீங்கள் அதிகாரப்பூர்வ Sansad TV மூலம் தொலைக்காட்சியிலும் காணலாம், யூ-ட்யூப்பிலும் காணலாம். நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் நீங்கள் காணலாம். நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திலும் நீங்கள் பட்ஜெட்டை நேரலையில் காணலாம். ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் யூ-ட்யூப் சுட்டி இதோ...! சரியாக காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை தொடங்கும்.