Budget 2024: 44% சம்பள உயர்வு... அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு இன்று வெளிவருமா?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான நீண்ட நாள் கனவு நிறைவேறவுள்ளது. 8வது ஊதியக்குழுவிற்கான சமீபத்திய புதுப்பிப்பை பற்றி இந்த பதிவில் காணலாம். 

8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், அது உழியர்களின் ஊதிய அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அதன் பிறகு அகவிலைப்படி, அலவன்சுகள், ஓய்வூதியம், மாத சம்பளம் என அனைத்தும் திருத்தப்படும். இதன் காரணமாக புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் பல ஊழியர் சங்கங்கள் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி வருகின்றன. தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமைக்கப்பட்டால், அதை ரூ.3.68 ஆக உயர அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 

1 /10

மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் சில நாட்களில் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. இதில் சில செய்திகள் இன்றே கிடைக்கலாம். இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

2 /10

அனைத்து துறைகளும் தங்களுக்கான கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் அளித்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் அரசாங்கத்திடம் 6 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளனர். இவற்றில் 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. பட்ஜெட்டில் 8வது ஊதியக்குழுவின் அறிவிப்பு வெளியாகுமா? இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /10

8வது ஊதியக்குழுவை தவிர கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், அரசு பணிகளில் காலியிடங்களை நிரப்புதல் என பல வித கோரிக்கைகள் மத்திய அரசு ஊழியர்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் ஊழியர் சங்கங்கள் காத்திருக்கின்றன. 

4 /10

8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், அது உழியர்களின் ஊதிய அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அதன் பிறகு அகவிலைப்படி, அலவன்சுகள், ஓய்வூதியம், மாத சம்பளம் என அனைத்தும் திருத்தப்படும். இதன் காரணமாக புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் பல ஊழியர் சங்கங்கள் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி வருகின்றன.  

5 /10

8வது உதியக்குழுவை வலியுறுத்தி பணியாளர் கவுன்சில் பொதுச் செயலாளர், இந்திய அரசின் அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விலக்கி புதிய ஊதியக் குழு அமைப்பது, 18 மாத நிலுவைத் தொகையை வழங்குவது ஆகியவற்றுக்கான கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. 

6 /10

8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், ஃபிட்மென்ட் ஃபாக்டரிலும் மாற்றம் ஏற்படும். 7வது ஊதியக்குழுவின் உருவாக்கத்தின் போதே ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால், அரசு அதை ஏற்கவில்லை. ஆகையால் இந்த முறையாவது ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.   

7 /10

தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமைக்கப்பட்டால், அது ரூ.3.68 ஆக உயர அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 

8 /10

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 -இலிருந்து 3.68 ஆக உயர்ந்தால், அதன் அடிப்படையில் மாத சம்பளம் சுமார் 44.44 சதவீதம் அதிகரிக்கும். இது மட்டுமின்றி, ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்துடன் நேரடி தொடர்பு உள்ளது. ஆகையால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால், அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயர்த்தப்படும். இந்த மாற்றம் ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படக்கூடும். அரசு வழக்கமான ஊதியக்குழு முறைகளை பின்பற்றினால் இந்த ஏற்றங்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.   

9 /10

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படுகின்றது. 7வது உதியக் குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அப்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன் படி, ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 6,000 -இல் இருந்து ரூ. 18,000 ஆக உயர்ந்துள்ளது.  

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.