சுமார் 40 வினாடி சக்திவாய்ந்த நிலநடுக்கம்! வீடு, அலுவலகத்தை விட்டு வெளியேறிய மக்கள்

Earthquake In New Delhi: சுமார் 40 வினாடிகளுக்கு மேல் நீடித்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 3, 2023, 04:41 PM IST
  • பிற்பகல் 2.53 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தின் தீவிரம் 4.6 ஆக இருந்தது.
  • அரியானாவில் இன்று இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் இருந்தது
சுமார் 40 வினாடி சக்திவாய்ந்த நிலநடுக்கம்! வீடு, அலுவலகத்தை விட்டு வெளியேறிய மக்கள் title=

Earthquake Latest News: டெல்லி - தேசியத் தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் இன்று (2023 அக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 40 வினாடிகளுக்கு மேல் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

நிலநடுக்கத்தின் மையம் நேபாளம்

இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2.53 மணியளவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அதன் தீவிரம் 4.6 ஆக இருந்தது. நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் இருந்தது எனக் கூறப்பட்டு உள்ளது. அதாவது இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.25 மணிக்கு ஏற்பட்ட முதலாவது 4.6 ரிக்டர் அளவிலும், 2.53க்கு 6.2 ரிக்டர் அளவிலும் பதிவாகி உள்ளது. அதேபோல உ.பி.யிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதன் தீவிரம் 5.5 ஆக பாதிவாகி இருந்தது.

மேலும் படிக்க - Canterbury: நியூசிலாந்தை குலுக்கி உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அரியானாவில் இரண்டு முறை நிலநடுக்கம்

டெல்லியின் அண்டை மாநிலமான அரியானாவில் இன்று இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. பானிபட், ரோஹ்தக், ஜிந்த், ரேவாரி மற்றும் சண்டிகர் போன்ற பகுதிகளில் பிற்பகல் 2:50 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். 

முன்னதாக இன்று காலை சோனிபட்டில் 2.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கக்து. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின்படி, செவ்வாய்க்கிழமை காலை 11.06 வினாடிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் சோனிபட் என்று கூறப்படுகிறது. பூமிக்கு கீழே 8 கிலோமீட்டர் தொலைவில் இயக்கம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Earthquake In Delhi

பூகம்பம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

நமது பூமியின் மேற்பரப்பு முக்கியமாக 7 பெரிய மற்றும் பல சிறிய டெக்டோனிக் தட்டுகள் ஆனது. இந்த தட்டுகள் தொடர்ந்து மிதந்து கொண்டே இருக்கும் மற்றும் சில சமயங்களில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும். பல நேரங்களில், இந்த மோதலின் காரணமாக, தட்டுகளுக்கு இடையே அதிக அழுத்தம் ​உண்டாகி விலக ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், பூமிக்கு கீழே இருந்து வெளியாகும் ஆற்றல் காரணமாக அதிர்வு ஏற்படும். இந்த அதிர்வு தான் பூகம்பம் ஏற்படக்க் காரணமாக அமைகிறது.

மிக மோசமான நிலநடுக்கம் எது?

மே 22, 1960 அன்று சிலியில் மிகவும் ஆபத்தான பூகம்பம் ஏற்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவில் 9.5 ஆக இருந்தது. இதனால் ஏற்பட்ட சுனாமியால் தெற்கு சிலி, ஹவாய் தீவுகள், ஜப்பான், பிலிப்பைன்ஸ், கிழக்கு நியூசிலாந்து, தென்கிழக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கர பேரழிவு ஏற்பட்டது. இதில் 1655 பேர் இறந்தனர், 3000 பேர் காயமடைந்தனர். 

அதேபோல 1556 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தால் சுமார் 8.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இதுதான் உலகின் மிக பயங்கரமான நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க - மொராக்கோவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! பலி எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News