இனி இரண்டு குழந்தைக்கு மட்டுமே அனுமதி... வருகிறது புது சட்டம்!

மக்கள் தொகையினை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தை கொண்டுவருமாறு RSS தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Last Updated : Jan 18, 2020, 04:36 PM IST
  • இந்தியா வளர்ந்து வரும் நாடு, ஆனால் கட்டுப்பாடற்ற மக்கள் தொகை வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல
  • CAA விவகாரத்தில் RSS தலைவர் மத்திய அரசுக்கு தனது ஆரதவினை தெரிவித்தார். ஆனால் இந்த பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனி இரண்டு குழந்தைக்கு மட்டுமே அனுமதி... வருகிறது புது சட்டம்! title=

மக்கள் தொகையினை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தை கொண்டுவருமாறு RSS தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பகவத், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையினை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தை கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சட்டமியற்றுபவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 40 மூத்த RSS செயல்பாட்டாளர்களின் சந்திப்பில் பேசிய மோகன், இதுகுறித்து தெரிவிக்கையில்., "இது காலத்தின் தேவை என்று நாங்கள் கருதுகிறோம், இருப்பினும் இது குறித்த இறுதி அழைப்பை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் எந்த தொடர்பையும் கொண்டிருக்காது, அனைவருக்கும் பொருந்தும்" என்று சங்க பரிவார் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பகவத்தின் இந்த கருத்து, ‘வாரணாசி மற்றும் மதுராவில் உள்ள கோயில்கள் அல்ல, இரண்டு குழந்தை விதிமுறைகளை கட்டாயமாக்கும் சட்டம் தான் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS)-ன் அடுத்த நிகழ்ச்சி நிரல்’ என்ற ஊகத்தைத் தூண்டியுள்ளது.

மொராதாபாத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள RSS தலைவர், நாட்டின் சரியான வளர்ச்சியை உறுதி செய்ய இரண்டு குழந்தைகளுக்கான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) ஒன்றில் உரையாற்றிய பகவத், இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே அழைக்கும் எந்தவொரு சட்டத்தையும் RSS ஆதரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், இந்தியா வளர்ந்து வரும் நாடு, ஆனால் கட்டுப்பாடற்ற மக்கள் தொகை வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல என்று கூறினார். எவ்வாறாயினும், இது தொடர்பாக இறுதி முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்பட உள்ளது என்று பகவத் கூறினார்.

தொடர்ந்து CAA விவகாரத்தில் RSS தலைவர் மத்திய அரசுக்கு தனது ஆரதவினை தெரிவித்தார். ஆனால் இந்த பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராம் கோயில் பற்றி பேசிய பகவத், இந்த விவகாரத்தில் RSS-ன் பங்கு கோயிலுக்கு மட்டுமே என்று கூறினார். "அறக்கட்டளை அமைக்கப்பட்டவுடன் நாங்கள் கோயில் கட்டுமானத்திலிருந்து விலகிவிடுவோம். மதுராவும் காசியின் RSS நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Trending News