பெங்களூரு: பெங்களுருவின் புறநகர்ப்பகுதியில் உள்ள பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் இரண்டு வெள்ளைப்புலி குட்டிகள் 40 வயதான விலங்குக் காப்பாளரை கொன்றுவுள்ளது
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.
விலங்குகளின் காப்பாளர் அஞ்சி, குட்டிகள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றது என என்னி கூண்டின் மற்றொரு பக்க வாயிலை திறந்து உள்ளே சென்றுள்ளார். ஆனால் புலிகுட்டிகள் எதிர்பாரத விதமாக அவரை தாக்கியுள்ளது.
அன்ஜி புலிகுட்டிகளிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தும் பலனில்லாமல் அவர் புலிகுட்டிகளுக்கு இரையானார்.
பன்னர்கட்டா காவல்துறையினர் இந்த விஷயம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரனை செய்து வருகின்றனர்.