புதுடெல்லி: முதலில் மஹாளய என்றால் கூட்டமாக கூடும் இடமாகும். அதேபோல அமாவாசை திதியில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது என்று கூறுவது வழக்கம். அதனால் தான் இந்த "மஹாளய அமாவாசை" அன்று அனைவரும் ஒன்றாக கூடி நமது முன்னோர்களுக்கு பரிகாரங்கங்கள் செய்வார்கள். அப்படி செய்தால் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்று இந்து மதத்தின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். ஆனால் புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை "மஹாளய அமாவாசை" என்று அழைக்கப்படுகிறது.
நம் முன்னோர்களை பித்ருக்களை சரிவர பூஜிக்காதது, தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மட்டுமே நாம் எத்தகைய பரிகாரங்களை செய்து வரினும், துன்பங்கள் மாறாது பெருகுவதற்கு உண்டான காரணம். அப்படி இத்தனை நாட்கள் இருந்திருப்பினும், அவை அனைத்தையும் போக்கும் வண்ணம் ஒரு பரிகாரம் உள்ளது. அதனை அவசியம் செய்து பயன் அடையவும்.
மஹாளய அமாவாசை அன்று ஐந்து தேங்காய்களை மாலையாக நூலினால் கட்டி, நீர் நிலைகள் (ஆறு, ஏறி, குளம், கடல்) உள்ள இடத்திற்கு சென்று, பித்ருக்களை மனதார பூஜித்து, அவர்களிடம் ஆசி வேண்டி, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின் அந்த மாலையை நீர் நிலைகளில் விட்டு விடவும்.
இந்த பரிகாரம் எளிமையாக தோன்றினாலும், பல்வேறு அதிசயங்களை உடனுக்குடன் கொடுக்க வல்லது. பித்ருக்களிடத்தில் நெஞ்சம் நிறைந்த அன்பும், மரியாதையும் மட்டுமே நிறைந்திருக்கும்.
மஹாளய அமாவாசை அன்று ஆண் பெண் இரு பாலரும் செய்யலாம். இறைவன் கொடுப்பதை விட முந்தி கொண்டு நமக்கு ஆசி வழங்கும் சக்தி பெற்றவர்கள் நமது பித்ருக்கள் என்பதனை மறந்து விட வேண்டாம்.
(தகவல்: சுவாமிநாதன் - Swaminathan)