பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர்தான்..! வீடியோ வெளியானது..

BB 7 Tamil Title Winner: பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 16, 2023, 03:53 PM IST
  • பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 7.
  • இதன் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
  • அவர் யார் தெரியுமா?
பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர்தான்..! வீடியோ வெளியானது.. title=

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் அதிக பார்வையாளர்களை கொண்ட ஷோவாக கருதப்படுவது, பிக்பாஸ். தற்போது இதன் 7வது சீசன் நடைப்பெற்று வருகிறது. 

பிக்பாஸ் சீசன் 7:

ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் நடந்து வந்த நிகழ்ச்சியை, இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சியாக மாற்றி ஒளிபரப்பு செய்து வருகின்றனர். முதலில் இந்தியில் தாெடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தந்த மொழிகளில் அந்தந்த திரையுலகினை சேர்ந்த பிரபல நடிகர்கள் தாெகுத்து வழங்கி வருகின்றனர். 

தமிழில், கடந்த 2017ஆம் ஆண்டு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதை, முதல் சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, பிக்பாஸ் சீசன் 7நிகழ்ச்சி தாெடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி டிஜிட்டல் முகங்களாக இருக்கும் சிலரும் களமிறங்கியுள்ளனர். 

டைட்டில் வின்னர் இவர்தான்..!

பிக்பாஸ் போட்டிக்குள் நுழைந்த போது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் சரவண விக்ரம். இவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜெய கண்ணன் எனும் கதாப்பாத்திரத்தில் வந்தார். அந்த சீரியலை முடித்து கொடுத்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதும், இவர்தான். கேப்டன் ஆன போது வீட்டில் பல்வேறு தரப்பில் இருந்து பிரச்சனைகள் எழுந்தன. அப்போது அதை சமாளிக்க முடியாமல் திணறி, பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளித்தார்.

கேப்டன்ஸிக்கு பிறகு அவருக்கு ஸ்கிரீன் டைம் பெரிதாக வரவில்லை. இந்த நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது. அதில், பிக்பாஸ் பாேட்டியாளர்கள் அனைவரும் உறங்க சென்றுவிட்ட நிலையில் இவர் காமன் ஏரியவில் “பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர்..சரவண விக்ரம்..” என தன் பெயரை தானே சொல்லிக்கொண்டார். இது, ட்ரோல் மெட்டீரியலாக மாறி ரசிகர்களிடையே வைரலானது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 பிரதீப் ஆண்டனியின் காதலி இவர்தான்..! வைரலாகும் போட்டோ..!

கேரக்டர் டாஸ்க்..

இன்றைய எபிசோடில், ஒருவர் போல இன்னொருவர் நடிக்கும் டாஸ்க் நடைப்பெற்றது. இது குறித்த ப்ரமோ வீடியோ வெளியானது. அதில், பூர்ணிமா பிக்பாஸ் டைட்டில் வின்னர் குறித்து பேச, உடனே விக்ரமன் அவர் பெயரை கூறுகிறார். இதுவும் தற்போது மீம் மெட்டீரியலாக மாறியுள்ளது. 

சுவாரஸ்யமே இல்லாத வாரம்..

பிற சீசன்களை விட, இந்த 7வது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் மோசமாக செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆரம்பித்த முதல் நாளே கேப்டன்ஸி டாஸ்க், முதல் வாரமே நாமினேஷன் மற்றும் எவிக்ஷன், ஸ்மால் பாஸ் வீடு-பிக்பாஸ் வீடு பிரிவினை என தொடக்கத்தில் சில விறுவிறுப்பான அம்சங்கள் நிறைந்திருந்தன. இதையடுத்து, சில நாட்கள் போட்டியாளர்களுக்குள் லவ் டிராக்குகளும் ஓடின. பிரதீப், இந்த சீசனில் அதிகம் கவனம் ஈர்த்த போட்டியாளராக இருந்தார். இவர் இருக்கும் இடங்களில் பிரச்சனைகளும் வெடித்து கொண்டிருந்தது. இவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பியவுடன் இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பியும் கீழ் நோக்கி சென்றது.  தற்போது, இந்த சீசனில் சுவாரஸ்யமாக எதுவும் நடப்பதில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | அஜித்தை வைத்து படம் இயக்க காத்திருக்கும் அட்லீ! ஸ்க்ரிப்ட் ரெடி..அண்ணன் ரெடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News