விடுதலை படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்த மற்றொறு இயக்குனர்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துக்கொண்டிருக்கும் 'விடுதலை' படத்தில் பிரபல இயக்குனர் ராஜிவ் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 25, 2022, 09:31 AM IST
  • விடுதலை படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது.
  • சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
  • விடுதலை இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளதாக தகவல்.
விடுதலை படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்த மற்றொறு இயக்குனர்! title=

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.  தமிழ் திரையுலகின் வெற்றி இயக்குனரான இவர் தற்போது 'விடுதலை' படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார்.  விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது, இந்த படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர், மேலும் இந்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.  இந்த படத்தில் நடிகர் சூரி போலீசாக நடிக்கிறார், இதற்கென அவர் தீவிர உடற்பயிற்சிகளை செய்திருக்கிறார்.  முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

Viduthalai

மேலும் படிக்க | ’இந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை’ ரசிகர்களிடம் கெஞ்சும் நித்யா மேனன்

மேலும் இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் சில செய்திகள் முன்னர் வெளியானது.  தற்போது இப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்களின்படி, பிரபலமான மூத்த இயக்குனர் ராஜிவ் மேனன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருக்கும் நிலையில் தற்போது முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு 90% நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.  இரண்டாம் பாகத்தில் ஒரு பெரிய சண்டை காட்சி இன்னும் படம்பிடிக்கப்படாமல் இருக்கிறது, அதனை விரைந்து முடிக்க படக்குழு ஏற்பாடு செய்து வருகிறது, இந்த சண்டை காட்சிக்கு பீட்டர் ஹெயின் கோரியோக்ராப் செய்கிறார்.

rajiv

இதுவரை தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சூரி முதன்முறையாக 'விடுதலை' படத்தில் ஹீரோவாக நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.  இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஆசிரியராக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | என்ன நடக்கிறது வாரிசு படப்பிடிப்பில்? லீக் ஆனது விஜய் - ராஷ்மிகா ரொமான்ஸ் காட்சிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News