சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்!!

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயுள்ளன. 

Updated: Feb 19, 2019, 05:54 PM IST
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்!!

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயுள்ளன. 

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியானது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பிசியாக இருக்கிறார். இதுதவிர ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் மகள்.