ஜல்லிக்கட்டு: நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரத போராட்டம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி இளைஞர்களும், மாணவர்களும் நடத்தும் எழுச்சி போராட்டத்தால் தமிழகம் முழுமையாக ஸ்தம்பித்தது.

Last Updated : Jan 20, 2017, 11:25 AM IST
ஜல்லிக்கட்டு: நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரத போராட்டம் title=

சென்னை: ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி இளைஞர்களும், மாணவர்களும் நடத்தும் எழுச்சி போராட்டத்தால் தமிழகம் முழுமையாக ஸ்தம்பித்தது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி நடிகர்-நடிகைகள் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் துவங்கினர். 

தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. 

இப்போராட்டத்துக்கு நடிகர், நடிகைகளை தவிர வேறு யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் யாருமே ஒளிப்பதிவு செய்ய வர வேண்டாம் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

இன்று காலை 8 மணியளவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, சத்யராஜ், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைதி வழியில் மவுனப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

 

 

Trending News