'நட்பே துணை' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள `நட்பே துணை'  திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 4 என படக்குழு அறிவித்துள்ளது. 

Updated: Mar 14, 2019, 01:23 PM IST
'நட்பே துணை' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள `நட்பே துணை'  திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 4 என படக்குழு அறிவித்துள்ளது. 

‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனது நண்பர்களுடன் ஹிப்ஹாப் தமிழா ஆதி களமிறங்கியுள்ள திரைப்படம் ‘நட்பே துணை’. மீசைய முறுக்கு திரைப்படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகத்தியிலேயே அமர்க்களமாக என்ட்ரி கொடுத்தவர் ஆதி. 

இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிக லாபம் சம்பாரித்தது. 

ரசிகர்களிடையே இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்கு கிடைத்த நிலையில் தற்போது மீண்டும் இளம் பட்டாளத்துடன் நட்பே துணை திரைப்படத்தின் மூலம் ஆதி களமிறங்கியுள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி தயாரிக்கின்றார். இப்படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு.

ஹாக்கி விளையாட்டையும், கல்லூரி வாழ்க்கையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நடிகை அனகா நடித்துள்ளார்.

இவர்கள் தவிர கரு.பழனியப்பன், பாண்டியராஜன், கௌசல்யா, பிளாக் ஷிப் குழுவினர் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள‌து. அதன்படி இந்தப் படம் ஏப்ரல் 4-ம் திரைக்கு வருகிறது.