Watching K Dramas Good For Mental Health : இந்தியாவில், பலருக்கு கொரிய டிராமாக்களை பார்க்க பிடிக்கும். ஒரு சிலர் வெட்டு-குத்து-கொலை போன்ற கதைக்கொண்ட கொரிய தொடர்களை பார்க்க, ஒரு பிரிவினர், காதல்-குடும்பம்-திருமணம் போன்ற கொரிய தொடர்களை பார்ப்பார்கள். அதை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அதில் வரும் கேரக்டர்கள் போலவே கொரிய மொழியில் பேசியும் காண்பிப்பர். நாளுக்கு நாள் இப்படி கொரிய தொடர்கள் மற்றும் அதில் காட்டுவது போன்ற ஃபேஷன் மோகம் உலகளவில் (குறிப்பாக இந்தியாவில்) அதிகரித்து வருகிறது. இது ஒரு சிலருக்கு எரிச்சலை கிளப்பினாலும், இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியான விஷயத்தை கொடுத்திருக்கிறது. கொரிய தொடர்களை தாெடர்ந்து பார்த்தால், நம் மனநலன் மேம்படும் என்பதுதான் அந்த செய்தி.
கொரிய தொடர்களை தொடர்ந்து பார்ப்பவர்கள் குறித்து பேசும் மனநல ஆலோசகர் ஜீனீ சாங், இதற்கு பின்னால் பல அர்த்தங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார். அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கைகளில் பல பிரச்சனைகள் இருக்கின்றன, இந்த பிரச்சனைகள் நமக்கு பல சமயங்களில் ஆறாத வடுக்களை (trauma) கொடுத்து விடுகின்றன. இது போன்ற தலைப்புகளைத்தான் கொரிய தொடர்களும் எடுத்து, தங்களின் பார்வையாளர்களுக்கு காண்பிக்கின்றன. இதனை பார்ப்பவர்கள், தங்கள் உணர்வுகளுடனும் ஒட்டுதலுடன் இருக்கின்றனர். இதனால், அவர்களின் மனநிலையும் மேம்படுகிறது என்கிறார்.
மன அழுத்தத்தை போக்குதல்:
கொரிய தொடர்களில் வரும் கதைகள், ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை நம் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. அது மட்டுமன்றி, இதில் காண்பிக்கப்படும் காட்சியமைப்புகளும் அழகாக இருப்பதால் அது பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. இது, ஒருவித உணர்வு ரீதியான தாக்கத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது. இதனால், நிஜ வாழ்க்கையில் இருக்கும் பெரும்பாலான மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை நாம் மறந்தே விடுகிறோம்.
உணர்ச்சிகள்:
கொரிய தொடர்களால் நமது உணர்ச்சிகளை சீக்கிரமாக சீண்டிவிட முடியும். சோகம், அழுகை, கவலை, மகிழ்ச்சி என அனைத்தையும் இவை தூண்டிவிடும் வகையில் இருக்கின்றன. இதனால், நாம் பல நாட்களாக மனதில் அழுத்தி வைத்திருந்த விஷயங்களும் பீரிட்டு அடிக்கலாம்.
கலாச்சாரம்:
கொரிய மொழி, கொரியாவில் வாழ்பவர்களின் கலாச்சாரம், அவர்கள் பிற நாட்டினரை பார்க்கும் பார்வை ஆகியவை நம்மை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன. இதனால், நம் மூளைத்திறனும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
புரிந்துணர்வு:
நம்முடன் அல்லது நமது குணாதிசயத்திற்கு ஒத்துப்போவது போன்ற கதாப்பாத்திரத்தை திரையில் பார்க்கும் போது, நமக்கே தெரியாமல் நம் மனதில் புரிந்துணர்வு குடிக்கொண்டு விடுகிறது. இதனால், நாம் பேசாத விஷயங்களை யாரோ பேசியது போலவும், அவர்களை மெயின் கேரக்டராக வைத்து ஒரு கதையை யாரோ உருவாக்கியது போலவும் நமக்கு தோன்றும்.
மேலும் படிக்க | கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் உங்களுக்கும் வேண்டுமா? காலையில் ‘இதை’ பண்ணுங்க..
சமூகத்துடனான ஒற்றுதல்:
கொரிய டிராமாக்களை இந்தியாவில் இருக்கும் அதிகமானோர் பார்க்கின்றனர். எனவே, இது குறித்து பிறரிடம் பேசுகையில், நமக்கும் சமூகத்துடனான ஒருவித ஒற்றுதல் ஏற்படுகிறது. இது, நம் தனிமை உணர்வை சற்று தணிக்க செய்கிறது.
நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள்:
கொரிய டிராமாக்களில் பெரும்பாலானவை பாசிடிவாக முடியும் கதையை கொண்டதாக இருக்கும். எனவே, இதை பார்ப்பவர்கள் தமக்குள் நம்பிக்கை பிறந்ததாக உணர்கின்றனர்.
தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும்:
கே-டிராமாக்களில் வரும் கதைகளில் அந்த கதாப்பாத்திரம் காதல், தோல்வி, வெற்றி என அனைத்து பாதைகளையும் கடந்து வருவதை காண்பிப்பர். இது, ஒருவரது தனிப்பட்ட வளர்ச்சியை திரும்பி பார்க்கவும், தன்னை பற்றி தனக்கே புரிதல் ஏற்படுத்திக்கொள்ளவும் உதவுமாம்.
மேலும் படிக்க | இந்திய பெண்களுக்கு கொரிய ஆண்களை பிடிப்பது ஏன்? காரணம் ‘இது’தான்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ