ரசிகரின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சூர்யா புகைப்படங்கள் Viral

நடிகர் சூர்யா அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர் மன்ற உறுப்பினர் ஹரியின் திருமணத்தில் கலந்துக் கொண்டு, தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2021, 03:37 PM IST
  • தனது ரசிகர் ஹரியின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சூர்யா
  • திருமண புகைப்படங்கள் வைரலாகிறது
  • வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா
ரசிகரின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சூர்யா புகைப்படங்கள் Viral title=

நடிகர் சூர்யா தனது ரசிகர் மன்ற உறுப்பினர் ஹரியின் திருமணத்தில் கலந்து கொண்டார். இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த திருமணத்தின் புகைப்படங்கள் வைரலாகின்றன

நடிகர் சூர்யா அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர் மன்ற உறுப்பினர் ஹரியின் திருமணத்தில் கலந்துக் கொண்டார். திருமணத்தில் கலந்துக் கொண்டதோடு, தாலி (thaali) எடுத்துக் கொடுத்து திருமணத்தையும் (wedding) நடத்தி வைத்தார். இது அவரது ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்ல, ரசிகர் ஹரியின் திருமணத்திற்கு வந்த சூர்யா (Surya) உடனடியாக சென்று விடவில்லை, நீண்ட நேரம் இருந்தார் என்று அவரது ரசிகர்கள் பெருமிதமாக சொல்லுகின்றனர். மணமகனும், மணமகளும் பெற்றோருடன் திருமண மேடையில் இருந்தபோது, குடும்பத்தை சேர்ந்த ஒருவர் போல அவர்களுடன் அங்கே இருந்தார் சூர்யா. 

திருமணம் முடிந்த பிறகு, மணமக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி அறிவுரைகளை சொன்னார், சூர்யா ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தங்களின் குடும்பத்தில் ஒருவர் என அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

திருமணத்தில் கலந்துக் கொண்ட சூர்யா வெள்ளை சட்டை மற்றும் சந்தன நிற பேன்ட் அணிந்திருந்தார். அவரது சிகை அலங்காரமும் வித்தியாசமாக இருந்தது.  

surya

சூரரைப் போற்று திரைப்படத்தில் கலக்கியதற்காக அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்ற சூர்யா, தற்போது, ரசிகரின் திருமண விழாவில் கலந்துக் கொண்டதற்காக பரவலாக பாராட்டப்படுகிறார். சூர்யாவின் தீவிர ரசிகரான ஹரி அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். அவர் இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக நடிகர் சூர்யாவின் ரசிகராக இருந்து வருகிறார்.

இந்த திருமணத்தில் கலந்துக் கொண்ட சூர்யாவின் தலைமுடி நீளமாய் இருக்கிறது. அடுத்த படத்திற்கான கெட்டப் இது என்று யூகிக்கப்படுகிற்து. இயக்குனர் பாண்டிராஜுடன் சூர்யா தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

தனது ரசிகர்களுடன் நல்லபடியாக உறவை பேணிவரும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. தேவைப்படும் போதெல்லாம் ரசிர்களுக்கு உதவுபவர். 

Also Read | தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அப்பாவுக்கு தடை, நடிகர் விஜய்  நோட்டீஸ்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News