Venus Transit: இன்று சுக்கிரன் பெயர்ச்சி! 4 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்குது! 5 ராசிகள் பாவம்!!

Venus Transit 2024: இன்று அதாவது ஜனவரி 18 அன்று இரவு 09:01 மணிக்கு தனுசு ராசிக்குள் நுழையும் சுக்கிர பகவான், பிப்ரவரி 12ம் தேதி வரை குரு பகவானின் ராசியில் இருப்பார். இன்றைய சுக்கிரன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்களைக் கொடுக்கும்? 

வளமுடன் வாழ காரண கர்த்தாவாக கருதப்படும் சுக்கிரன், ஏற்கனவே தனுசு ராசியில் இருக்கும் செவ்வாய் மற்றும் புதன் கிரகங்களூடன் இணைந்து வாழ்க்கையில் நிம்மதி தருவார். ஆனால், ஜாதகத்தில் ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்களைக் கொடுக்கும் சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

1 /13

இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை குரு பகவானின் ராசியில் இருக்கும் சுக்கிரன் 12 ராசிகளில் யாருக்கு எப்படிப்பட்ட பலன்களைக் கொடுப்பார்?

2 /13

மீன ராசிக்காரர்களுக்கு, இந்த சுக்கிரன் பெயர்ச்சி, உத்தியோகத்தில் புதிய யோசனைகளையும் அணுகுமுறைகளையும் தோன்ற வைக்கும். நிதி வெற்றியைப் பொறுத்த வரையில், அதிலும் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பு மற்றும் அயராத முயற்சிகள் சிறந்த முடிவுகளைத் தரும் 

3 /13

தொழில் வாழ்க்கையில், மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட கால முதலீடுகளைச் செய்யத் திட்டமிடுபவர்ளுக்கு நல்ல நேரம் இது. பதினொன்றாம் வீட்டில் உள்ள சுக்கிரன் உங்கள் அபிலாஷைகளையும் நீண்ட கால இலக்குகளையும் நிறைவேற்ற உதவியாக இருப்பார்

4 /13

நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள், ஆனால் நீங்கள் உங்கள் செலவுகளைக் கவனித்து, புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும். மகர ராசியினரில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்

5 /13

சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி உங்கள் தோற்றம் மற்றும் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்த உங்களை ஊக்குவிக்கும், அத்துடன் சுய முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும். இந்த நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் அன்றாட வழக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்தவும்

6 /13

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் பெயர்ச்சியி அற்புதமானதாக இருக்கும். சுக்கிரனின் பெயர்ச்சியின் போது சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், அது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

7 /13

துலாம் ராசியினருக்கு, சுக்கிரன் பெயர்ர்சி சாதகமான முடிவுகளைத் தரும். கடின உழைப்பு மற்றும் உங்கள் செயல்களுக்காக முதலாளி உங்களைப் பாராட்டுவார்.  ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலம் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு சாதகமானதாக இருக்கும்.உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் மேம்படும். 

8 /13

கன்னி ராசியினருக்கு பணியிடத்தில் மேலதிகாரிகள் கடின உழைப்பை பாராட்டுவார்கள். உங்களுக்கு புதிய அடையாளமும், பணியிடத்தில் உயர் பதவியும் கிடைக்கும். இது உங்கள் வேகமான முன்னேற்றத்திற்கு உதவும்.

9 /13

சிம்ம ராசிக்காரர்கள் கடின உழைப்பு மற்றும் செயல்திறனால், தொழில் வாழ்க்கையில் வெற்றியை அடைவீர்கள். மூன்றாம் மற்றும் பத்தாம் வீட்டிற்கும் அதிபதியாக இருக்கும் சுக்கிரன், இப்போது உங்கள் ஐந்தாவது வீட்டிற்கு செல்வதால் ஒரு புதிய அடையாளத்தைப் பெறுவீர்கள், சிறப்பாக செயல்படுவீர்கள்

10 /13

கடக ராசிக்காரர்களுக்கு, சக ஊழியர்களுடனான உறவுகள் மேம்படும், இது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு பங்களிக்கும். இந்த காலகட்டத்தில், கடின உழைப்பின் விளைவாக, உங்கள் நிதி நிலைமையும் மேம்படும்

11 /13

 மிதுன ராசியினருக்கு தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும், இது எதிர்காலத்திற்கு சிறந்ததாக இருக்கும். சுக்கிரன் தனுசு ராசியைக் கடந்து மிதுன ராசியின் ஏழாவது வீட்டிற்குள் நுழையும் போது, ​​ மனைவியுடனான உறவு மேம்படும் 

12 /13

ரிஷப ராசிக்காரர்கள் முழு தைரியத்துடன் இயங்கும் கால இது. வேலையில்  ஆர்வமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உணர்ச்சி ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும். இந்த காலம் கூட்டு முயற்சிகள் மற்றும் நிதி திட்டமிடல்களுக்கு நல்லதாக இருக்கும் 

13 /13

காதல் வாழ்க்கையில் சாதகமான முடிவுகளைக் காணவிருக்கும் மேஷ ராசிக்காரர்கள், வாழ்க்கைத் துணையுடன் இனிமையான அனுபவத்தைப் பெறுவீர்கள், உங்கள் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்