இந்த ஆண்டில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் 100 கோடி ரூபாயை கடந்த 8 தென்னிந்திய திரைப்படங்கள்.
1. RRR; ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கிட்டதட்ட 1000 கோடி ரூபாயை வசூலித்தது. இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றி படங்களின் வரிசையிலும் இடம்பிடித்தது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்தனர்.
2. KGF 2; பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கேஜிஎப் 2 மிகப்பெரிய ஹிட் அடித்தது. வசூல் வேட்டை நடத்திய இந்தப் படமும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இந்திய சினிமா வரலாற்றில் அதிகம் வசூலித்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது.
3. பொன்னியின் செல்வன்; மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. லைகா புரொடக்ஷன் தயாரித்த இந்தப் படம் வசூலில் 200 கோடி ரூபாயை கடந்தது
4. விக்ரம்; கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் லீட் ரோலில் நடித்த இந்தப் படம் ஏறத்தாழ 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கினார்.
5. பீஸ்ட்; நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் பீஸ்ட். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது
6. டான்; சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் வசூலில் 100 கோடியை கடந்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரயங்கா அருள்மோகன் நடித்திருந்தார்.
7. பீம்லா நாயக்; பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபட்டி ஆகியோர் நடித்த இப்படம் ரூ 193 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
8. சர்க்காரு வாரி பாடா; மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.200 கோடி வசூலித்தது.