தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த அரிசி ரகங்களில் பலவற்றை அழிந்து விட்டது. இருப்பினும் தற்போது ஓரளவு பயன்பாட்டில் உள்ள சில பாரம்பரிய அரிசி ரகங்களையும் அவற்றின் பலனையும் பார்க்கலாம்.
"மூங்கில் அரிசி" பூத்த மூங்கிலில் இருந்து கிடைக்கும் இந்த அரிசி விளைய சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் ஆகும். பழங்குடி மக்களின் முக்கிய உணவாக இந்த அரிசி உள்ளது.வாத நோயிக்கு அருமருந்தாக உள்ள இந்த அரிசியை சுமார் 12 மணி நேரம் ஊறவைத்து சமைக்க வேண்டும். எலும்பு தொடர்பான அத்தனை நோய்களுக்கும் இந்த அரிசி சிறந்தது.
"மாப்பிள்ளை சம்பா" தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அல்சரை முற்றிலுமாக தவிற்கும் இந்த அரிசி வகை, உடல் வெப்பத்தை குறைக்கும். அதேபோல, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.ஹீமோகுளோபின் மற்றும் மூளை வலிமையை அதிகரிக்கச் செய்யும்.
"கருப்பு கவுனி" இந்த வகை அரிசி மன்னர்கள் மட்டுமே உட்கொண்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. தமிழகத்தில் சோழர் காலத்தில் இருந்தே இந்த அரிசி பயன்பாட்டில் இருந்துள்ளது.புற்றுநோய் எதிர்ப்பையும், இன்சுலின் சுரப்பையும் இந்த அரிசி மேம்படுத்துகிறது.
"காட்டுயானம் " இந்த வகை அரிசி ரகம் சுமார் 7 அடி உயரத்திற்கும் மேலாக வளரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை தரும் இந்த வகை அரிசி ரகம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த பங்காற்றுகிறது.
"பூங்கார் கைகுத்தல்" பெண்களுக்கு நல்லது. கர்ப்பிணிகளின் இடுப்பு எலும்பை பலப்படுத்தி சுகப்பிரசவத்திற்கு உதவி செய்யும்.
Next Gallery