தினசரி உணவு முறை முதல், மாலை உடற்பயிற்சி வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளவும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவது எப்படி என்று அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்று கொள்ளலாம்.
உணவு முறை முகேஷ் அம்பானி உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக உள்ளார். காலையில் ஆரோக்கியமான பானங்கள் தொடங்கி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை மட்டுமே எடுத்து கொள்கிறார். இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
உடற்பயிற்சி நீதா அம்பானி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள பல்வேறு உடற்பயிற்சிகளை செய்கிறார். தினசரி யோகா, நீச்சல், ஜிம் என்று முறையாக பராமரிக்கிறார். உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கும் உதவும்.
நீரேற்றம் எவ்வளவு தான் பழச்சாறுகள் குடித்தாலே உடலுக்கு தண்ணீர் அதிக ஆற்றலை தருகிறது. நீதா அம்பானி சர்க்கரை கலந்த பானங்களை தவிர்த்து இளநீர், கிரீன் டீ, பழங்கள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
மன அழுத்தம் மனம் ஆரோக்கியமாக இருந்தால் எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெறும். நிதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி இருவரும் தினசரி தியானம் மற்றும் யோகா மேற்கொள்கின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக்கு இவை அவசியம்.
தூக்கம் எவ்வளவு உழைத்தாலும் உடலுக்கு தூக்கம் அவசியம். அம்பானி வீட்டில் உள்ளவர்கள் இரவு சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எதிரிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகின்றன.
குடும்பத்துடன் நேரம் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவது, நபர்களுக்கு நேரம் ஒதுக்குவதை முகேஷ் அம்பானி தொடர்ச்சியாக செய்து வருகிறார். எவ்வளவு பணிகள் இருந்தாலும், இவற்றை தவறாமல் செய்து வருகிறார்.