காலையில் ‘இந்த’ விஷயங்களை 5 நிமிடம் செய்தால்..தொட்டதெல்லாம் வெற்றிதான்!

5 Minutes Daily Morning Habits For Success : நாம் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்றால் சில விஷயங்களை தினம்தோறும் செய்தாக வேண்டும். அவற்றை 5 நிமிடங்கள் செய்தாலே போதும். 

5 Minutes Daily Morning Habits For Success : நம் அனைவருக்குமே வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதற்கு நாம் தினமும் எடுக்கும் சிறுசிறு முயற்சிகளும் பெரிய வழியை போட்டுத்தரும். அப்படி வெற்றிபெற தினமும் 5 நிமிடங்கள் சில விஷயங்களை செய்தாலே போதும். அவை என்னென்ன தெரியுமா? 

1 /7

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் அருந்துங்கள். இது, உங்களின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, செரிமானத்தையும் மேம்படுத்தும். 

2 /7

எழுந்த பின், உங்கள் கை-கால்களை நீட்டி-மடக்கி பயிற்சி செய்ய வேண்டும். உடலையும் வளைத்து இப்படி வேலை கொடுப்பதால், நீங்கள் உடலளவில் அந்த நாளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள தயாராகலாம். 

3 /7

உங்கள் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய, கவனத்துடன் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நாசியால் மெதுவாக மூச்சை இழுத்து, வாயால் வெளியேற்ற வேண்டும். இதனால், உங்களுக்கு எந்த விஷயத்தை பார்த்தாலும் அதில் தெளிவு கிடைக்கும். 

4 /7

உங்கள் நாள் எப்படி செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதனை அப்படியே மனதுக்குள் காட்சிப்படுத்தி பாருங்கள். இது, உங்களுக்கு நிகழ் காலத்தில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தைரியம் கொடுக்கும்.

5 /7

உங்களுடன் நீங்களே பேசிக்கொள்ள ஒரு முக்கியமான பழக்கமாக இருப்பது, எழுதுவது. தினந்தோறும் உங்கள் நாளை தொடங்கும் முன்பு பாசிடிவான விஷயங்களை எழுதுங்கள். அல்லது உங்கள் காதுகளில் கேட்கும் படி நீங்களே சொல்லுங்கள். 

6 /7

5 நிமிடங்களில், உங்கள் நாள் எப்படி செல்ல வேண்டும் என்பதையும் நீங்கள் திட்டமிடலாம். இந்த நாளில் உங்களின் முக்கியமான வேலை என்ன, செய்து முடிக்க வேண்டியவை என்ன என்பதை To-Do List-ஆக போட்டு அதன்படி நடக்கலாம். இதை தினமும் செய்தால், உங்களின் ஒவ்வொரு நாளும் முக்கியமானதாக மாறும். 

7 /7

உங்கள் நாளை, சுற்றி இருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுவதுடன் தொடங்குங்கள். அது எவ்வளவு சிறிய விஷயமாக அல்லது பெரியதாக இருந்தாலும் பரவாயில்லை. அனைத்திற்கும் நீங்கள் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும்.