மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோ

7th Pay Commission: நரேந்திர மோடி அரசாங்கம் செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7th Pay Commission: தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. சமீபத்தில் ஜூன மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் ஜூலை 2024 முதல் அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. ஜூலை 2024 -இல் அகவிலைப்படி (Dearness Allowance) 3% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும். இது பணவீக்கம் மற்றும் விலைவாசியால் அவதியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

1 /10

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி உள்ளது. ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சாதகமான செய்தி கிடைக்கவுள்ளது. நரேந்திர மோடி அரசாங்கம் செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 /10

ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்பு மார்ச் மாதம் 4% அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 50% ஆக அதிகரித்தன.

3 /10

அகவிலைப்படி 50%- ஐ எட்டியதை அடுத்து, டிஏ பூஜ்ஜியம் ஆக்கப்படுமா என்ற பேச்சு எழுந்தது. எனினும், 7வது ஊதியக் குழுவின் படி அகவிலைப்படி 0% -ஐ எட்டினால், அது 0 ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், தற்போது அகவிலைப்படியை 0 ஆக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. 

4 /10

இதை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்த நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ‘நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படைக் குறியீட்டை விட 50% அதிகரிக்கும் போதெல்லாம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தில் இணைக்க 5வது ஊதியக் குழு பரிந்துரைத்தது. பிப்ரவரி 2004 இல் 50% டிஏ (DA) அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் 6வது ஊதியக் குழு, அகவிலைப்படி  50% -ஐத் தாண்டினாலும், அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம் என அறிவுறுத்தியது.’ என்று கூறினார்.

5 /10

மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜீலை மாதங்களில் இந்த திருத்தம் அமலுக்கு வருகின்றது. எனினும் இதற்கான அறிவிப்பு முறையே மார்ச் மற்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வருகின்றது. தற்போது ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.  

6 /10

தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. சமீபத்தில் ஜூன மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் ஜூலை 2024 முதல் அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. அப்படி நடந்தால் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53% ஆக அதிகரிக்கும்.

7 /10

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ கணக்கீடு - DA% = [(கடந்த 12 மாதங்களுக்கான சராசரி AICPI - 115.76)/115.76] x 100; பொதுத்துறை ஊழியர்களுக்கான டிஏ கணக்கீடு - DA% = [(கடந்த 3 மாதங்களுக்கான சராசரி AICPI - 126.33)/126.33] x 100. இங்கு, AICPI என்பது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டைக் குறிக்கிறது.   

8 /10

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.31,500 என வைத்துக்கொள்வோம். அவரது தற்போதைய அகவிலைப்படி 50%, அகவிலைப்படித் தொகை மாதம் ரூ.15,750 ஆக இருக்கும். 6 மாதங்களுக்கு இது ரூ.94,500 ஆக இருக்கும். ஜூன் 2024 முதல் அகவிலைப்படி 3% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 53% ஆனால், அகவிலைப்படித் தொகை மாதத்திற்கு ரூ.16,695 ஆகிவிடும். 6 மாதங்களுக்கு இது ரூ.1,00,170 ஆக உயரும்.  

9 /10

ஜூலை 2024 -இல் அகவிலைப்படி (Dearness Allowance) 3% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும். இது பணவீக்கம் மற்றும் விலைவாசியால் அவதியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.