நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம் என ஐந்து பூதங்களிலும் சிவனின் அருளே நிரம்பியுள்ளது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் தலங்களை தரிசிப்போம்!!
கோயில் நகரம் காஞ்சியில் சிவனின் தரிசனம் விருப்பங்களை நிறைவேற்றி மன அமைதியையும் மோட்சத்தையும் அளிக்கும்.
திருவானைக்காவல் கோயில் தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமையையும், வளத்தையும், திருமண பாக்கியத்தையும், நல்ல விளைச்சலையும் அளிக்கும்.
காளஹத்தி கோயில் தரிசனம் நாக தோஷங்களை நீக்கி நன்மைகள் பலவற்றை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும்.
அண்ணாமலை தரிசனம் துக்கம், துயர் நீக்கி மோட்சம் தரும். இடர்கள் தீயில் துவண்டு போகும். கிரிவலம் செய்தால் மகிழ்ச்சி நம்மை வலம் வரும். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை!!
சிதம்பரம் நடராஜர் தரிசனத்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், மன அமைதி, வளம், கலைத் திறன் ஆகியவை பெருகும். ஆகாயமாய் வளங்கள் விரியும்!!