Bigg Boss 8 Title Winner Prediction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிய இருக்கிறது. இந்த நேரத்தில் டைட்டில் வெல்லப்போகிறவர் யார் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர்கள் பேசியிருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigg Boss 8 Title Winner Prediction : ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக விளங்குகிறது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி, தற்போது கடைசி நாட்களை நெருங்கி வருகிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் தொய்வாக சென்றாலும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்து, இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இந்த நிலையில், பழைய போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வர ஆரம்பித்து இருக்கின்றனர். இவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற போட்டியாளர் குறித்து பேசி வருகின்றனர். இதை வைத்து இணையத்தில் பலர் “டைட்டில் வின்னர் இவர்தான்” என குறிப்பிட்ட ஒரு நபரை கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக பலர் களமிறங்கினாலும், இப்போது 8 பேர் மட்டுமே மீதமிருக்கின்றனர்.
இந்த சீசனில், பலரது மனங்களை கொள்ளை கொண்ட போட்டியாளராக இருக்கிறார், சௌந்தர்யா. இவர், கண்டிப்பாக டாப் 5 போட்டியாளர்களுள் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, கிட்டத்தட்ட 96 நாட்களை கடந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக முன்னாள் போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்திற்குள் வரும் நிகழ்வு நடைப்பெற்று வருகிறது. இதில், மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்றவர் எந்த போட்டியாளர் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர்கள் பேசி வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் மிகவும் வலுவான போட்டியாளர் என கைக்காட்டுவது, முத்துக்குமரனைதான். ஆரம்பத்தில் இருந்தே தனது கருத்துகளை வலுவாக கூறி வரும் அவர், இந்த சீசனின் டைட்டில் வின்னராக வர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலானோர் முத்துக்குமரன் பக்கம் நின்றாலும், இன்னும் சிலர் வேறு சில போட்டியாளர்களின் பெயர்களையும் கூறி வருகின்றனர்.
அப்படி கூறப்படும் இன்னொரு பெயர், ராயன். வைல்ட் கார்ட் மூலம் நிகழ்ச்சிக்குள் வந்த இவர், போட்டிக்குள் வந்த மாத்திரத்திலேயே விளையாட்டை நேர்த்தியாக கொண்டு சென்றார். இவரும் டாப் 5 விளையாட்டு வீரர்களுள் ஒருவராக வர வாய்ப்புள்ளதாம்.
அதே போல, அனைத்து வாரமும் நாமினேட் செய்யப்பட்டு, முதல் ஆளாக சேவ் ஆனவர் ஜாக்குலின். இவருக்கும் மக்கள் ஆதரவு அதிகமாகவே உள்ளது. எனவே, இவரும் டைட்டில் வின்னர் ஆகலாம் என கூறப்படுகிறது. இறுதிப்போட்டியின் போதுதான் யார் வின்னர் என்பது குறித்து முழுமையாக தெரியும்.