விஜய்யின் 50வது பிறந்தநாளில் ரீ-ரிலீஸாகும் 5 சூப்பர் ஹிட் படங்கள்! என்னென்ன தெரியுமா?

Vijay Hit Movies Re Releasing On His Birthday : நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி, அவரது சூப்பர் ஹிட் திரைப்படங்கள் சில ஜூன் 22ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அவை என்னென்ன தெரியுமா?

Vijay Hit Movies Re Releasing On His Birthday : தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருபவர், விஜய். இவர், வரும் ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை ஆவலுடன் எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். தனது 20களில் சினிமாவிற்குள் நுழைந்த விஜய், தற்போது 50வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் என்பது பலரை வியக்க வைத்திருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்த போதிலும், ஒரு சில படங்கள் அவர் பெயர் சொல்லும் வகையில் இருக்கின்றன. அந்த வகையில், வரும் ஜூன் 22ஆம் தேதியன்று ரீ-ரிலீஸாகும் சில படங்களை இங்கு பார்ப்போம். 

1 /8

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் திரையுலகிற்கு வந்தாலும், இன்று தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவரை பெரும்பாலான 90s மற்றும் 2K குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது.

2 /8

சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, சினிமாவில் இருந்து விரைவில் விடைபெற இருப்பதாக அறிவித்தார். வரும் ஜூன்22ஆம் தேதியன்று தனது விஜய்க்கு 50வது பிறந்தநாளாகும். இதைக்கொண்டாட அவர் ஆவலுடன் இருக்கிறாரோ இல்லையோ, அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, அவரது பிறந்தநாளில் அவர் நடித்த 5 சூப்பர் ஹிட் படங்கள் வெளிவர இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

3 /8

துப்பாக்கி: 2012ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம், துப்பாக்கி. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். விஜய் நடித்ததிலேயே நன்றாக இருந்த கடைசி படம் இதுதான் என்று கூட ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்த படம், தமிழகத்தின் ஒரு சில திரையரங்குகளில் விஜய் பிறந்தநாள் அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. 

4 /8

போக்கிரி: விஜய்யின் போக்கிரி திரைப்படம், 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். பிரபுதேவா இயக்கியிருந்த இந்த படம், தமிழகத்தில் நல்ல வசூலை பெற்ற படங்களுள் ஒன்று. இந்த படத்தையும் விஜய் பிறந்தநாளில் தியேட்டரில் பார்க்காலாம். 

5 /8

மெர்சல்: அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, மெர்சல். இந்த படம், 2017ஆம் ஆண்டு வெளியானது. இதில், விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். விஜய்யுடன் இணைந்து சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இந்த படத்தை வரும் ஜூன் 22ஆம் தேதி தியேட்டர்களில் கண்டு களியுங்கள். 

6 /8

மாஸ்டர்: லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் முதன் முதலாக நடித்த படம் மாஸ்டர். வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், இப்படம் விமர்சனத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதுவும் இன்னும் இரு தினங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. 

7 /8

கத்தி: இந்த பெயரை கேட்டவுடன் மண்டைக்குள் இதன் பிஜிஎம் ஓடும். அந்த அளவிற்கு 2014ஆம் ஆண்டில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் இது. விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான இரண்டாவது படம் இது. இதன் ரீ ரிலீஸும் வர்ம் 22ஆம் தேதிதான். தமிழகத்தின் சில திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கலாம். 

8 /8

கில்லி: ரிலீஸ் செய்யப்பட்ட போதும், ரீ-ரிலீஸ் ஆன போதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களுள் ஒன்று கில்லி. இதுவும், தற்போது 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸாகிறது. ஒரு நடிகரின் பிறந்தநாளில் 5 படங்கள் ரீ-ரிலீஸ் ஆவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை எனக்கூறப்படுகிறது.