வித்தியாசமான முறையில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினி!

இன்று அனைவரும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில் நடிகர் ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து வித்யாசமான முறையில் அமைந்துள்ளது.

1 /6

இன்று ஜனவரி 1ம் தேதி உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. புது ஆண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.

2 /6

புத்தாண்டு தினம் விடுமுறை நாள் என்பதால் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

3 /6

பொதுவாக விசேஷ நாட்களில் முக்கிய பிரபலங்கள் மக்களுக்கு வாழ்த்து சொல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த புத்தாண்டுக்கு ரஜினியின் வாழ்த்து சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது.

4 /6

"நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

5 /6

இதுக்கு முன்னர் நடிகர் ரஜினி இதுபோன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதே இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏன் இப்படி பதிவிட்டுள்ளார் என்று குழப்பத்தில் உள்ளனர்.  

6 /6

யாரையும் குறிப்பிட்டு இவ்வாறு பதிவிட்டு உள்ளாரா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் இருக்கிறதா? என்று மக்களும் குழம்பி உள்ளனர்.