50 ஆண்டுகளுக்கு பிறகு கிறங்களின் அபூர்வ நிகழ்வு.. 5 ராசிகளுக்கு ராஜ பொற்காலம்

வேத ஜோதிடத்தின்படி பிப்ரவரி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கும். ஏனெனில் 50 ஆண்டுகளுக்கு பிறகு, மகர ராசியில் திரிகிரஹி யோகத்தின் (புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை) சுப சேர்க்கை நடக்கப்போகிறது.

50 ஆண்டுகளுக்கு பிறகு, மகர ராசியில் திரிகிரஹி யோகத்தின் (புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை) சுப சேர்க்கை நடக்கப்போகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது புதன் மகர ராசியில் பெயர்ச்சி அடைகிறார். அதன்பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி மகர ராசியில் செவ்வாய் பெயர்ச்சியும், பிப்ரவரி 12-ம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடக்கப்போகிறது. இதனால் பல ராசிகளின் வாழ்க்கையை பாதிக்கும். எனவே திரிகிரஹி யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /6

மேஷம்: பிப்ரவரி மாதத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் சாதகமாகவும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. மேஷ ராசிக்காரர்களுக்கு மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வணிக வகுப்பைச் சேர்ந்தவர்களும் வணிகத்தில் பெரிய ஒப்பந்தத்தைப் பெறலாம்.  

2 /6

கன்னி: 50 ஆண்டுகளுக்குப் பிறகு, செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கையால கன்னி ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் அபரிமிதமான வெற்றியைப் பெறுவார்கள், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சில வேலைகளை முடிவுக்கு வரும். மேம்படும் மற்றும் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசுத் துறை தொடர்பான அனைத்துப் பணிகளும் எளிதாக முடிவடையும், முதலீட்டினால் உங்களின் நிதி நிலை வலுப்பெறும். புதிய வாகனம் அல்லது நிலம் வாங்கலாம் மற்றும் சொந்தமாக தொழில் தொடங்கலாம்.   

3 /6

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு மகர ராசியில் உருவாகும் திரிகிரஹி யோக பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள், நிதி நிலைமை மேம்படும் மற்றும் உங்கள் வங்கி இருப்பில் நல்ல அதிகரிப்பு இருக்கும்.   

4 /6

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் மூன்று கிரகங்களின் சேர்க்கையால் நல்ல பலனைத் தரும். நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மூன்று கிரகங்களின் சேர்க்கையால், நீங்கள் பெரும் லாபத்தையும் உங்கள் பதவி மற்றும் கௌரவத்தில் நல்ல உயர்வையும் காண்பீர்கள்.   

5 /6

மகரம்: மூன்று கிரகங்களின் சேர்க்கை அதிக நன்மைகளைத் தரும். ஆளுமையை மேம்படுத்தும் மற்றும் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய சிறப்பான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். தொழில் முன்னேற்றம் அடையலாம்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.