50 ஆண்டுக்கு பின் உருவாகும் சதுர்கிரக யோகம், இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு, அனைத்திலும் வெற்றி

Chaturgrahi yog after 50 years: ஆகஸ்ட் மாதத்தில் புதனும் சூரியனும் சிம்ம ராசியில் பயணிக்கப் போகிறார். அப்போது சுக்கிரன், சந்திரன் கிரகமும் இந்த ராசிக்குள் நுழையும். அப்படிப்பட்ட நிலையில் இந்த 4 கிரகங்களும் சிம்மத்தில் சேர்க்கை தந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்கும்.

நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியல் ராசியை மாற்றும், அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அதில் சில யோகங்கள் சில கிரகங்களின் அரிய சேர்க்கையினால் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் சிம்ம ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது புதன், சந்திரன், சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகவுள்ளது.

1 /7

ஆகஸ்ட் மாதம் சிம்ம ராசியில் புதன், சந்திரன், சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த சுப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.  

2 /7

ஜூலை 19ஆம் தேதி சிம்ம ராசியில் நுழையப் போகும் புதன் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை இந்த ராசியின் தான் பயணிக்கப் போகிறது. பின்னர் ஆகஸ்ட் 16ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைவார். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 25 வரை சுக்கிரன் சிம்மத்தில் பயணிப்பார்.  

3 /7

இப்படிப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு பிறகு சிம்மத்தில் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சேர்க்கை தந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்கும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் இந்த அபூர்வ யோகம் உருவாகப் போகிறது. எனவே சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.  

4 /7

சிம்மம்: சதுர்கிரக யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களை பெறலாம். வேலையில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வையும் பெறுவீர்கள். திருமண யோகம் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.  

5 /7

விருச்சிகம்: சதுர்கிரக யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பெரிய சாதனைகளை செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணம் சம்பாதிக்க பல பொன்னான வாய்ப்புகளை பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதோடு, பணத்தை சேமிக்க முயற்சி செய்வீர்கள். புதிய வேலை வாய்ப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.  

6 /7

தனுசு: சதுர்கிரக யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சில மதிப்புமிக்க பரிசுகளைப் பெறுவீர்கள். வீட்டில் சில மத நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபத்தைப் பெறலாம்.  

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.