முலாம்பழ விதைகளில் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்: தெரிஞ்சா தூக்கிப்போட மாட்டீங்க

Health Benefits Of Muskmelon Seeds: சுட்டெரிக்கும் வெயில் மற்றும் வெப்பத் தாக்குதலைத் தவிர்க்க, மக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்க விரும்புகிறார்கள். உணவு மற்றும் பழங்களைப் பற்றி பேசினால், கோடையில் கிடைக்கும் பல பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 

மாம்பழம், தர்பூசணி, வெள்ளரிக்காய், லிச்சி, சீதாப்பழம் என அனைத்துப் பழங்களிலும் தண்ணீர் நிறைந்துள்ளது. இவற்றை உட்கொள்வதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். முலாம்பழம் கோடையில் கிடைக்கும் ஒரு பருவகால பழமாகும். இந்த பழத்தில் பல நற்குணங்கள் நிறைந்துள்ளன.  முலாம்பழம் சாப்பிட மிக இனிமையாக இருக்கும். இது மட்டுமின்றி இது நமது ஆரோக்கியத்துக்கும் மிக நல்லதாகும். 

1 /6

முலாம்பழத்தை விட, முலாம்பழ விதைகளில் இன்னும் அதிக நன்மைகள் உள்ளன. முலாம்பழ விதைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

2 /6

முந்தைய காலங்களில் முலாம்பழத்தை வெட்டிய பின் அதன் விதைகளை கழுவி சுத்தம் செய்து வெயிலில் காய வைப்பார்கள். பின்னர் இந்த விதைகளை அல்வா போன்ற இனிப்பு பண்டங்களில் சேர்த்து உட்கொள்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதையெல்லாம் செய்ய மக்களுக்கு போதிய நேரம் இல்லை. ஆனால், முலாம்பழம் விதைகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உட்கொள்ளலாம்.

3 /6

முலாம்பழ விதைகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. பிபி பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், முலாம்பழம் விதைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொட்டாசியம் நிறைந்த இந்த விதை இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

4 /6

கோடையில் வழக்கமான செயல்படுகளை செய்ய, உடலுக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க சிறப்பு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. தர்பூசணி விதைகளில் வைட்டமின்-சி போதுமான அளவில் உள்ளது. எனவே இதனை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முலாம்பழம் விதைகள் இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

5 /6

வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நம் கண்களின் பராமரிப்புக்கு தேவை. முலாம்பழம் விதைகளில் இவை இரண்டும் நிறைந்துள்ளன, அவை நம் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த விதைகளை நீங்கள் தொடர்ந்து உட்கொள்ளலாம். இது கண்புரை அபாயத்தைக் குறைக்கிறது. இதனுடன், கண்களின் ஒளியும் அதிகரிக்கிறது.

6 /6

உங்கள் நகங்கள் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்பினால், நீங்கள் முலாம்பழம் விதைகளை உட்கொள்ளத் தொடங்கலாம். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அதே நேரத்தில் நகங்களும் வலுவாக இருக்கும். முலாம்பழம் விதைகளில் அதிக புரதங்கள் உள்ளன, அவை திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.