வயிற்றுப்போக்கை குணப்படுத்த இந்த ஆயுர்வேத பானங்கள் போதும்

Diarrhoea Ayurvedic Remedy: வயிற்றுப்போக்கு பிரச்சனையால் நீங்களும் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் உடனடியாக நிவாரணம் பெற இப்பதிவில் பகிரப்பட்டுள்ள ஆயுர்வேத குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்.

Diarrhoea Ayurvedic Remedy: வயிற்றுப்போக்கு என்பது மிக்கப்பறிய பிரச்சனையாகும். இந்த வயிற்றுப்போக்கால அசௌகரியத்தையும், சிரமத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நம்மில் பலர் டையாரியா (Diarrhoea) எனப்படும் வயிற்றுப் போக்கு நோயால் அவதிப்படுகிறார். இந்நோய் ஆரம்ப நிலையிலிருக்கும்போதே ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில எளிய பானங்களை வீட்டிலேயே தயாரித்து அருந்தலாம். அந்த பானங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

1 /7

கெமோமைல்: கெமோமைல் டீ தினமும் குடிப்பது வயிற்றுக் கோளாறுகளை நீக்க உதவும். அதுமட்டுமின்றி இந்த டீ வயிற்றுப் போக்கை குணப்படுத்தவும் பெரிய அளவில் உதவும்.  

2 /7

பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து குடிப்பதால் வயிறு வீக்கம், பிடிப்புகள் வாய்வு போன்ற ஜீரண மண்டலக் கோளாறுகள் சரிசெய்யலாம்.  

3 /7

இளநீர்: வயிற்றுப் போக்கின்போது இளநீர் அருந்துவதலாம். ஜீரண மண்டல ஆரோக்கியமும் மேம்படுத்த உதவும்.

4 /7

பட்டர் மில்க்: ஒரு கிளாஸ் பட்டர் மில்க் அருந்துவதால் அதிலுள்ள ப்ரோபயோடிக்ஸ் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஜீரணத்துக்கு உதவக்கூடிய நல்ல பாக்டீரியாக்களின் அளவை சமநிலைக்குக் கொண்டுவர உதவும்.  

5 /7

சீரகத் தண்ணீர்: வயிற்றுப் போக்கு பிரச்சனை இருந்தால் சீரகத் தண்ணீர் அருந்தலாம். உடலில் நார்மல் நிலைக்கு கொண்டு வரவும் நோய் தீவிரமடைவதைத் தடுக்கவும் சீரகத் தண்ணீர் குடிக்கலாம்.  

6 /7

இஞ்சி டீ: இஞ்சி டீ வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தவும் உணவு நன்கு ஜீரணமாகவும் குடிக்கலாம். ஒரு கப் இஞ்சி டீயை காலையில் அருந்தினால் வயிற்றில் ஏற்பட்டுள்ள வீக்கம் குறையும்.  

7 /7

பொறுப்பு துறுப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதற்கு முன் மருத்துவ ஆளோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.