புளி சமையலுக்கு ருசியை சேர்க்கிறது. புளி பழம் சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். புளியில் உள்ள சத்துக்கள் உடலை பல பிரச்சனைகளில் இருந்து விலக்கி வைக்கிறது.
புளியை உட்கொள்வதால் உடல் எடை குறைகிறது. செரிமானம் மேம்படும். அதுமட்டுமின்றி, புளி இதய ஆரோக்கியம், நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் மூட்டுவலி நிவாரணம் என இதன் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
புளியினால், அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அளவிற்கு அதிகமாக உட்கொள்வது பற்களை சேதப்படுத்தும். புளியை அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
புளியை குறைந்த அளவில் தினமும் உட்கொள்ளலாம். இருப்பினும், இது தனிநபரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பொறுத்தது. அத்தகைய சூழ்நிலையில், புளி எவ்வளவு சாப்பிடலாம் என்பதை அறிய ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
புளி இரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
புளி விதைகளை சேர்த்துக் கொள்வதால், நீரிழிவு பிரச்சனையிலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் வலி மற்றும் பிடிப்புகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. (பொறுப்பு துறப்பு : இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE மீடியா இதற்கு பொறுபெபெற்காது.)