ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, வாட்ச் சீரிஸ் 9 அறிமுகம்

பல்வேறு மாற்றங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஐபோன் 15, ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகிய ஐபோன்-கள் அறிமுகம் செய்யப்பட்டன.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 உள்ளிட்ட ஐபோன் 15 வரிசையில் புதிய மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் முழு விவரத்தை இங்கே காண்போம்.

1 /7

புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 15 சீரஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

2 /7

ஐபோன் 15 ஆனது A16 Bionic SoC உடன் பொருத்தப்பட்டுள்ளது, இது இரண்டு உயர் செயல்திறன் கோர்களைக் கொண்டுள்ளது, மேலும் மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்கான 6-கோர் CPU உடன் உள்ளது.

3 /7

ஐபோன் 15 பிளஸ் இப்போது குறிப்பிடத்தக்க டைனமிக் ஐலேண்ட் இதில் உள்ளது. அதேபோல் பிங்க், மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு என 5 வண்ணங்களில் கிடைக்கும்.

4 /7

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் டைட்டானியம் சேஸ்ஸைக் கொண்டுள்ளன, அதேபோல் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் கைரேகை சென்சாரில் கறைகள் படிவதைக் குறைக்கும் அம்சம் உள்ளது. 

5 /7

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இரண்டும் ஏ17 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படுகின்றன.

6 /7

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலை பொறுத்தவரை ஆப்பிள் இதுவரை உருவாக்கியதில் அதிக பிரைட்னஸ் கொண்டதாக டிஸ்பிளே உள்ளது. முக்கியமான அம்சங்களாக பார்த்தால், பாஸ்ட் சார்ஜிங், 3000 nits பிரைட்னஸ், பிளாஷ் லைட் பூஸ்ட், நியூ கெஸ்டர்ஸ், ஆக்‌ஷன் பட்டன் ஆகியவை கொண்டுள்ளது.

7 /7

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9: புதிய ஆப்பிள் வாட்ச் எஸ் 9 சீரிஸ் புதிய S9 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 18 மணி நேரம் பேட்டரி லைப் கொண்டது ஆகும். அதேபோல் புதிய சிப் மூலம் ஹெல்த்டிராக்கிங் சிஸ்டமும் மேம்பட்டதாக இருக்கும். புதிய் U2 chip மூலம் பைண்ட் மை ஃபீட்சர் வசதி மற்றும் கனெக்ட்விட்டி மேம்பட்டு இருக்கும்.