இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபல பாடகி சக்திஸ்ரீ கோபாலன்!

நெஞ்சுக்குள்ள, அக நக போன்ற பாடல்களை பாடி பிரபலமான பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலனை, 'தி டெஸ்ட்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக  ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

1 /5

டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் 'தி டெஸ்ட்' படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.  இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகிறார்.  

2 /5

'தி டெஸ்ட்' படத்தில் பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலனை இசையமைப்பாளராக, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  தமிழ் திரையுலகில் குறைந்த அளவிலேயே பெண் இசையமைப்பாளர்கள் இருந்து வருண் நிலையில் அந்த லிஸ்டில் பாடகி  சக்திஸ்ரீ கோபாலன் சேர்ந்துள்ளார்.  

3 /5

தமிழில் கடல், மரியான், ராஜா ராணி, இரண்டாம் உலகம், மெட்ராஸ், காக்கி சட்டை, ஓ மணப்பெண்ணே போன்ற பல படங்களில் மனதை மயக்கும் பாடல்களை பாடி தனது வசீகரமான குரலால் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன்.  

4 /5

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் த்ரிஷா மற்றும் கார்த்தி இடம்பெறும் "அக நக அக நக முக நகையே" பாடலை பாடி பலரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டிருக்கிறார்.  

5 /5

இதுவரை பாடகியாக அனைவரது மனதிலும் ஆட்சி செய்து வந்த சக்திஸ்ரீ கோபாலன், இனிமேல் இசையமைப்பாளராக புதிய அவதாரமெடுத்து அனைவரது இதயத்திலும் ஆட்சி செய்யப்போகிறார்.