Aishwarya Arjun Engagement: நடிகர் அர்ஜுனின் மகள், ஐஸ்வர்யாவின் திருமண நிச்சதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பிரபல நடிகர் அர்ஜுனின் மூத்த மகள், ஐஸ்வர்யா. இவர், 2013ஆம் ஆண்டு கோலிவுட் திரையுலகிற்குள் நுழைந்தார்.
விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ படத்தில் நாயகியாக நடித்த இவர், அதன் பிறகு பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
2018ஆம் ஆண்டில் மட்டும் தெலுங்கில் வெளியான ‘பிரேமா பராஹா’ எனும் படத்தில் நடித்தார்.
ஐஸ்வர்யாவும் பிரபல தமிழ் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகனான உமாபதியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சமீபத்தில் கிரீன் சிக்னல் கொடுத்தனர்.
ஐஸ்வர்யா-உமாபதியின் திருமண நிச்சதார்த்தம் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக நடந்தது.
ஐஸ்வர்யா-உமாபதியின் நிச்சயதார்த்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.