கீல் வாதம் மற்றும் முடக்கு வாதம் தற்போது பெரும்பாலானோரை பாதித்துள்ளது. இளம் வயதினர் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை சீர்குலைவுகள் காரணமாக, மூட்டுவலி ஏற்படும் அபாயம் அதாவது கீல் வாதம் மற்றும் முடக்கு வாத பிரச்சனை கணிசமாக அதிகரித்துள்ளது.
மூட்டுவலி பிரச்சனையை தடுக்க, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். சில உணவுகள் மற்றும் பானங்கள் கீல்வாதத்தின் வீக்கம் மற்றும் வலியை அதிகரிக்கும்.
மூட்டுவலி பிரச்சனையை தடுக்க, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். சில உணவுகள் மற்றும் பானங்கள் கீல்வாதத்தின் வீக்கம் மற்றும் வலியை அதிகரிக்கும். இந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கண்டபடி சாப்பிட்டு தொடர்ந்தால், அது மூட்டுவலி உள்ளவர்களுக்கு, பிரச்சனைகள் தீவிரமடையும்.
ஆராய்ச்சியில், அதிக உப்பு பொருட்களை சாப்பிட்டால், மூட்டுவலி பிரச்சனைகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக சோடியம் உள்ள உணவை உட்கொள்வது கீல்வாதம் அழற்சி மற்றும் தன்னுடல் தாக்க நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். கீல்வாதத்தின் சிக்கல்களைத் தவிர்க்க, உணவில் உப்பின் அளவைக் குறைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
பொரித்த உணவுகள் அதிக உட்கொண்டால் முடக்கு வாத பிரச்சனை அதிகரிக்கும். ஏனென்றால், குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு முடக்கு வாத அறிகுறிகளை தீவரமாக்கும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ள உணவுகள் குடல் நுண்ணுயிர் சமநிலையை பாதிக்கிறது.
மூட்டுவலி உள்ள நோயாளிகளுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த உணவுகள் மூட்டு வலியை அதிகரிக்கும், இன்டர்லூகின்-6 (IL-6), C-ரியாக்டிவ் புரதம் (CRP) மற்றும் ஹோமோசைஸ்டீன் போன்றவற்றின் அளவுகளை அதிகரிக்கலாம்.
ஆல்கஹால், மது அருந்தினால், இந்த பழக்கம் மூட்டுவலி பிரச்சனைகளை அதிகரிக்கும். கீல்வாத தாக்குதல்களின் தீவிரத்தன்மை மது அருந்துபவர்களுக்கு அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது கீல்வாதத்தின் ஒரு காரணியாகவும் அறியப்படுகிறது.