ரூ.1000க்குள் அற்புதமான பிராட்பேண்ட் திட்டங்கள்!

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் 1000 ரூபாய்க்கு கீழ் சில பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகின்றன.

 

கொரோனா நெருக்கடி காலத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை என்ற கலாச்சாரம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பிராட்பேண்ட் இணைப்பை வாங்கி வருகின்றனர். அந்தவகையில் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் ஆகியவை 1000 ரூபாய்க்கு கீழ் சில பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகின்றன.

1 /4

ரூ .999க்கு கீழ் Airtel XStream பிராட்பேண்ட் திட்டம்: ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் என்டர்டெயின்மென்ட் பிராட்பேண்ட் திட்டம் அன்லிமிடெட் இன்டர்நெட் வசதியை 200 Mbps வேகத்துடன் கால்ஸ் வசதிகளையும் வழங்குகிறது. இதில், Zee5, Amazon Prime, Disney + Hotstar VIP subscription, airtel xstream streaming பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

2 /4

ரூ.999க்கு JioFiber பிராட்பேண்ட் திட்டம்: இந்த திட்டம் அன்லிமிடெட் டேட்டாவுடன் 150Mbps சமச்சீர் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்துடன் வருகிறது. Amazon Prime, Disney + Hotstar, Sony LIV, Zee5 உள்ளிட்ட 14 OTT பயன்பாடுகளுக்கான அணுகல் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் ஆகியவற்றை இதில் பெறலாம். 

3 /4

ரூ.999க்கு BSNL Premium Fibre பிராட்பேண்ட் திட்டம்: இதில் 200Mbps வேகத்தை ரூ .999 க்கு 3300 ஜிபி அல்லது 3.3 டி.பி. டேட்டாவுடன் வழங்குகிறது. இந்த திட்டம் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு இலவச பிரீமியம் உறுப்பினருடன் வருகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு அதன் பிராட்பேண்ட் திட்டங்களுடன் பிரீமியம் சந்தாவை வழங்கும் ஒரே டெல்கோ பிஎஸ்என்எல் ஆகும். 

4 /4

ரூ.999 Excitel பிராட்பேண்ட் திட்டம்:  ஒரு மாத செல்லுபடியாக்கத்திற்கு 300 Mbps வேகத்தை வழங்குகிறது. எக்ஸிடெல் சமீபத்தில் அதன் 3 மாதம் செல்லுபடியாகும் 300Mbps பிராட்பேண்ட் திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்ட்ரீமிங் நன்மைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. 

You May Like

Sponsored by Taboola