ஜெர்மன் உடற்கூறியல் (anatomist) நிபுணர் சடலங்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். அதற்கு பல தரப்பினரிடம் இருந்தும் விமர்சனங்கள் வந்துள்ளன.
2021 மார்ச் 24ஆம் தேதியன்று மாஸ்கோவில் உடல் உலக கண்காட்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சடலங்களின் புகைப்படத் தொகுப்பு இது...
Also Read | ரோபோ சோபியாவின் டிஜிட்டல் கலைப்படைப்புகள் என்ன தொகைக்கு ஏலம் போனது தெரியுமா?
ஜெர்மன் உடற்கூறியல் (anatomist) நிபுணர் சடலங்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். அதற்கு பல தரப்பினரிடம் இருந்தும் விமர்சனங்கள் வந்துள்ளன. 2021 மார்ச் 24ஆம் தேதியன்று மாஸ்கோவில் உடல் உலக கண்காட்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். (Photograph:AFP)
இந்த கண்காட்சி மத விசுவாசிகளை அவமதிக்கக்கூடும் என்று பலர் புகார் கூறியதால் கண்காட்சி நடைபெற்ற மாஸ்கோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் 24, புதன்கிழமையன்று நடைபெற்ற கண்காட்சி பற்றி விசாரணை மேற்கொள்வதாக ரஷ்ய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். (Photograph:AFP)
ஜெர்மன் உடற்கூறியல் நிபுணர் குந்தர் வான் ஹேகன்ஸ், சர்ச்சைக்குரிய தனது நிகழ்ச்சியுடன் 20 ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார், பாதுகாக்கப்பட்ட சடலங்களையும் மனித உறுப்புகளையும் அவர் தனது கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறார். (Photograph:AFP)
கண்காட்சி "தார்மீக விழுமியங்களை மீறுகிறது" என்றும் "விசுவாசிகளின் மத உணர்வுகளை அவமதிப்பதாக கருதலாம்" என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. (Photograph:AFP)
கண்காட்சிக்கு எதிராக ஒரு கையெழுத்து போராட்டமும் தொடங்கப்பட்டுள்ளது, இது "ஒரு நபரின் நெறிமுறை, தார்மீக மற்றும் ஆன்மீக பக்கத்தை அழிக்கிறது, சமுதாயத்தையும் அரசையும் தாழ்த்துகிறது" என்று கூறும் மனுவில் 900 க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். (Photograph:AFP)
எது எப்படி இருந்தால் என்ன? கண்காட்சி ஏற்பாட்டாளர் நிறுவனர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒதுக்கித் தள்ளுகிறார். அனைத்து சடலங்களும் நன்கொடையாளர்களின் முழுமையான புரிதலோடு பெறப்பட்டதாகக் கூறியுள்ளார். ஒருவர் இறந்தபின்னர், தனது உடல் இதேபோல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். (Photograph:AFP)