Indian Raiways: ரயில் நிலையங்கள் என்றால் எப்பொழுதும் மக்கள் கூட்டம், சலசலப்பு என பரபரப்பாகவே இருக்கும்.
சந்தைக்கடையாய் இருக்கும் ரயில் நிலையங்களை பார்த்துப் பழகியவர்களுக்கு ஆச்சரியம் தரும் சில ரயில் நிலையங்கள் இந்தியாவில் உள்ளன.
கட்டிடக்கலை அல்லது பாரம்பரியம் மட்டுமன்றி, தூய்மையின் அடிப்படையிலும் முதலிடத்தை பிடித்துள்ள ரயில் நிலையங்களின் பட்டியலை சமீபத்தில் இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. இந்த 6 நிலையங்களும் ஸ்வச் பாரத் அபியானின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
ராஜஸ்தானில் உள்ள பிகானேர் இந்தியாவின் தூய்மையான ரயில் நிலையமாக கருதப்படுகிறது.
இந்த நிலையம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் அமைந்துள்ளத ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் சுகாதாரத்தை பராமரிக்க மேம்பட்ட சுத்திகரிப்பு அமைப்பு உள்ளது.
பீகார் ரயில் நிலையங்களில், வெற்றிலை மற்றும் எச்சில் துப்பிய அடையாளங்கள் இல்லாமல் இருக்காது என்று கூறப்படுவதுண்டு. அதை மாற்றியமைக்கும் பாட்னா ஜங்ஷன் இது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மும்பையில் உள்ள பிரபலமான ரயில் நிலையம். மகாராஷ்டிராவில் உள்ள இந்த ஸ்டேஷன் அழகில் மட்டுமின்றி பாரம்பரியத்தின் அடிப்படையிலும் முக்கியமானது. மும்பை தாக்குதலின் முக்கிய மையமாகவும் இந்த நிலையம் இருந்தது.
ஜெய்சால்மர் ரயில் நிலையத்தின் அழகான தோற்றம் இது. ராஜஸ்தானில் உள்ள இந்த ரயில் நிலையம் இருப்பிடத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமானது. இந்த ஸ்டேஷன் கவனமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறது.
அசாமின் குவஹாத்தி ரயில் நிலையம் வெளியில் இருந்து பார்த்தால் மலைகளில் உள்ள அழகான சுற்றுலா மையம் போல் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது