Beautiful Temples In India: நீங்கள் கண்டிதாத இந்தியாவின் இத்தகைய அழகான கோயில்கள்...

இந்திய கோயில்களைப் பற்றி பேசுவது, செதுக்கல்களுக்கும் அற்புதமான கலைப்படைப்புகளுக்கும் எப்போதும் பிரபலமானது. அத்தகைய கோயில்களின் புகைப்படங்களைப் பார்க்க வாருங்கள் ...

  • Sep 10, 2020, 14:22 PM IST

புது டெல்லி: இந்தியாவில் பல கோயில்கள் உள்ளன, அவை செதுக்குதலில் சிறந்தவை மற்றும் பிரபலமானவை. இந்திய கோயில்களைப் பற்றி பேசுவது, செதுக்கல்களுக்கும் அற்புதமான கலைப்படைப்புகளுக்கும் எப்போதும் பிரபலமானது. தென்னிந்தியாவில் மட்டும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன, அவை திராவிட மற்றும் ஆரிய கட்டடக்கலை பாணிகளின் சங்கமத்திற்கு பெயர் பெற்றவை. அத்தகைய கோயில்களின் புகைப்படங்களைப் பார்க்க வாருங்கள் ...

1 /5

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.

2 /5

கஜுராஹோ குரூப் ஆஃப் நினைவுச்சின்னங்கள், இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்கள் மற்றும் சமண கோயில்களின் ஒரு குழுவாகும், இது ஜான்சியின் தென்கிழக்கில் சுமார் 175 ஆகும். அவை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம். கோயில்கள் நாகரா பாணியிலான கட்டடக்கலை அடையாளத்திற்கும் அவற்றின் சிற்றின்ப சிற்பங்களுக்கும் புகழ் பெற்றவை.

3 /5

தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும். இது இராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர். மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இது மாமல்லபுரம் கடற்கரை கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது கி. பி. எட்டாம் நூற்றாண்டு (700-728) முதல் கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் உருவாக்கத்தின் போது இந்த இடமானது ஒரு செயல்பட்டுக் கொண்டிருந்த துறைமுகமாக இருந்தது. அப்போது இந்த இடத்தை பல்லவ அரசமரபின் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆண்டு கொண்டிருந்தார். இக்கடற்கரைக் கோயிலை 1984ல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் கற்களால் கட்டுமானம் செய்யப்பட்ட கோயில்களில் மிகவும் தொன்மையானதாகும்.

4 /5

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே, தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தலத்தினை, 'சிவன் முக்திபுரம்' என்றும் அழைக்கின்றனர். இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். இதனை, ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர்.

5 /5

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில்) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும். தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.