வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை.... பீட்டா கரோட்டின் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கின் வியக்க வைக்கும் நன்மைகள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கினை சூப்பர்ஃபுட் என்று அழைக்கும் அளவிற்கு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. சற்று இனிப்பான சுவை கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வியக்கத்தக்க நன்மைகள் கிடைக்கும் 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு ஆற்றலை அளிப்பதால் எனர்ஜி பூஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் பருமனை குறைக்க உதவுவது முதல், கொல்ஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது வரை எண்ணற்ற வகைகளில் நன்மை பயக்கும் ஆற்றல் கொண்டது.

1 /9

சர்க்கரை வள்ளிக் கிழங்கில், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நியாசின் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

2 /9

உடல் பருமன்: சர்க்கரை வள்ளிக்கிழங்கு நார்ச்சத்து நிறைந்த காய்கறி. இது உங்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. அதோடு, கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. இது பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தடுக்கலாம். மேலும்,  வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடலின் கூடுதல் கொழுப்பை எரிக்க (Weight Loss Tips) உதவுகிறது.

3 /9

இதய ஆரோக்கியம்: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. எனவே, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட இது, கொல்ஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை குறைக்கலாம்.

4 /9

சர்க்கரை நோய்: சர்க்க்ரை வள்ளிக் கிழங்கு சுவையில்  இனிப்பாக இருந்தாலும், இதன் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள், இனிப்பு உணவு சாப்பிட விரும்பினால், இது பாதுகாப்பன தேர்வாக இருக்கும் எனலாம்.

5 /9

புற்றுநோய்: பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் காணப்படுகின்றன. கரோட்டினாய்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளில் நிறைந்துள்ளன. இவை இரண்டும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

6 /9

கண் பார்வை கூர்மை:  வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு காரட்டிற்கு இணையாக கண் பார்வையை கூர்மை படுத்தி, கண் நோய்கள் ஏதும் வராமல் தடுத்து பாதுகாக்கிறது.

7 /9

நோய் எதிர்ப்பு சக்தி: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. எனவே, நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, பருவகால நோய்களுக்கு நாம் உடனடியாக பாதிக்கப்படலாம். 

8 /9

சர்க்கரை வள்ளிக் கிழங்கை உட்கொள்ளும் முறை: வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சுட்டு சாப்பிடுவதும், அதன் மருத்துவ குணங்களை அதிகரித்துக் கொடுக்கும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.