தற்போதுள்ள சூழ்நிலையில் அனைவரும் ஒரு வங்கி கணக்காவது வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. சிலர் வெவ்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்க விரும்புகிறார்கள்.
பொதுவாக சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால் வரிகள் வராமல் இருக்க ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகளின்படி, வங்கி சேமிப்பு கணக்கில் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால் வருமான வரித் துறைக்கு உங்களது கணக்கு விவரங்கள் அனுப்பப்படும்.
மேலும் ஒரே நேரத்தில் ரொக்கமாக 50000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தாலே, தங்கள் பான் எண்ணை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களது நிறுவன கணக்கில் 50000 ரூபாய்க்கு மேல் வங்கியில் ரொக்கமாக டெபாசிட் செய்தாலும், பான் விவரங்களை காண்பிக்க வேண்டும்.
வங்கியில் அதிகமாக பணத்தை டெபாசிட் செய்யும் போது அதற்கான வரியை செலுத்த வேண்டியதில்லை. ஆனால், விசாரணையில் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் வரி அல்லது அபராதம் செலுத்த வேண்டும்.