சாதம் வடித்து சாப்பிடும் முறையை நாம் இன்றைய மறந்துவிட்டனர். சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது. வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அந்தவகையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கே பார்போம்
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.
வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
ஆய்வுகளில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் ஞாபக மறதியைத் தடுக்கும் என்று நிரூபிக்கப்படாவிட்டாலும், ஒருசில செய்திகள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீருக்கு ஞாபக மறதியைத் தடுக்கும் திறன் உள்ளதாக சொல்கிறது. இதனால் தான் நம் தாத்தா, பாட்டியின் ஞாபக சக்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் உள்ளது